குடியுரிமை அடிப்படையிலான பாகுபாடு குறித்து அதிக புகார்கள்

குடியுரிமை அடிப்படையிலான பாகுபாடு குறித்து அதிக புகார்கள்

2 mins read
8d266a88-fcbd-4109-9ecf-52e1ad3bfb30
-

கடந்த 2014ஆம் ஆண்­டி­லி­ருந்து இவ்­வாண்­டின் முதல் ஆறு மாதங்­கள் வரை வேலை­யி­டப் பாது­காப்பு தொடர்­பாக நியா­ய­மான வேலை நடை­மு­றைக் கண்­கா­ணிப்­புக் குழு­வி­டம் ஒவ்­வோர் ஆண்­டி­லும் சரா­ச­ரி­யாக 379 புகார்­கள் செய்­யப்­பட்­ட­தாக மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தார்.

அவற்­றில் ஏறத்­தாழ 60 விழுக்­காடு குடி­யு­ரிமை தொடர்­பி­லா­னவை என்­றார் அவர்.

வயது, பாலி­னம், இனம், மொழி அடிப்­ப­டை­யி­லான பாகு­பாடு தொடர்­பா­க­வும் புகார்­கள் செய்­யப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

திரு­ம­ண பந்­தம், குடும்­பப் பொறுப்­பு­கள் தொடர்­பான பாகு­பாடு குறித்து 13 புகார்­கள் செய்­யப்­பட்­டன.

சமய அடிப்­ப­டை­யி­லான பார­பட்­சம் குறித்து ஏழு புகார்­களும் உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்கு எதி­ரான பாகு­பாடு குறித்து இரண்டு புகார்­களும் செய்­யப்­பட்­டன.

பைனி­யர் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பேட்­ரிக் டே கேட்ட கேள்­விக்கு டாக்­டர் டான் நாடா­ளு­மன்­றத்­தில் எழு­து­பூர்­வ­ ­பதி­ல­ளித்­தார்.

அனைத்து வேலை­யி­டப் பாகு­பா­டு­கள் குறித்­தும் நியா­ய­மான, முற்­போக்­கான வேலை நடை

­மு­றைக்­கான முத்­த­ரப்­புக் கூட்­டணி விசா­ரணை நடத்­தி­ய­தாக டாக்­டர் டான் கூறி­னார்.

முன்­வைக்­கப்­பட்ட புகார்­களில் பெரும்­பா­லா­ன­வற்­றக்கு தகுந்த ஆதா­ரம் இல்லை என்­றும் பெரும்­பா­லான புகார்­கள் தவ­றான புரி­த­லால் செய்­யப்­பட்­டவை என்­றும் மனி­த­வள அமைச்சின் மூத்த துணை அமைச்­சர் கோ போ கூன் நாடா­ளு­மன்­றத்­தில் கூறி­யி­ருந்­ததை டாக்­டர் டான் உறுதி செய்­தார்.

விசா­ர­ணைக்­காக மனி­த­வள அமைச்­சின் கவ­னத்­துக்கு 121 புகார்­கள் கொண்டு செல்­லப்­பட்­டன.

நியா­ய­மான வேலை நடை­முறை வழி­காட்டி நெறி­மு­றை­களை ஒவ்­வோர் ஆண்­டும் சரா­ச­ரி­யாக 41 முத­லா­ளி­கள் மீறி­ய­தாக அவற்­றின் மூலம் தெரி­ய­வந்­தது.

சம்­பந்­தப்­பட்ட முத­லா­ளி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த வேலை அனு­மதி அட்­டைச் சலுகை தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­டதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.