விருப்புரிமை அடிப்படையிலான ஊழியர்களுக்கான ஆலோசனைக் குழு கூடியது

1 mins read
93b68982-a93f-4d90-9e22-dc084ccd758b
-

விருப்­பு­ரிமை அடிப்­ப­டை­யி­லான ஊழி­யர்­க­ளுக்­கும் அவர்­கள் வேலை பார்க்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் இடையே நியா­ய­மான உறவை ஏற்­ப­டுத்த சட்­டத்­தில் மாற்­றம் கொண்­டு­வ­ரப்­படும் சாத்­தி­யம் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தத் தக­வலை விருப்­பு­ரிமை அடிப்­ப­டை­யி­லான ஊழி­யர்­க­ளின் நல­னைப் பாது­காக்க அமைக்­கப்­பட்­டுள்ள ஆலோ­ச­னைக் குழு வெளி­யிட்­டது.

இக்­குழு முதல்­மு­றை­யாக நேற்று கூடி கலந்­து­ரை­யா­டி­யது. சட்­ட திருத்­தம் குறித்த கலந்­து­ரை­யா­டல்­கள் ஆரம்­ப­நி­லை­யில் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

விநி­யோக ஓட்­டு­நர்­கள், தனி­யார் வாடகை கார் ஓட்­டு­நர்­கள், டாக்சி ஓட்­டு­நர்­கள் போன்­ற­வர்­கள் விருப்­பு­ரிமை அடிப்­ப­டை­யி­லான ஊழி­யர்­கள் பிரி­வின்­கீழ் அடங்­கு­வர். பல­த­ரப்­பி­ன­ரு­டன் கலந்­து­ரை­யாடி அவர்­க­ளது கருத்­து­க­ளைச் சேக­ரித்து அடுத்த ஆண்­டின் இரண்­டாம் பாதிக்­குள் அனை­

வ­ரும் பல­ன­டை­யும் வித­மான பரிந்­து­ரை­களை முன்­வைக்­கத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக ஆலோ­ச­னைக் குழு­வின் ஆலோ­ச­க­ரா­கச் செயல்­படும் சுகா­தார, மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் கோ போ கூன் தெரி­வித்­தார்.

விருப்­பு­ரிமை அடிப்­ப­டை­யி­லான ஊழி­யர்­க­ளின் ஓய்­வு­க்கால, வீட­மைப்பு அம்­சங்­கள் போன்­ற­வற்றை மேம்­ப­டுத்த ஆலோ­ச­னைக் குழு இலக்கு கொண்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இப்­பி­ரி­வைச் சேர்ந்த ஊழி­யர்­

க­ளுக்கு வேலை­யி­டத்­தில் காயம் ஏற்­பட்­டால் போது­மான நிதிப் பாது­காப்பு இருப்­பதை ஆலோ­ச­னைக் குழு உறுதி செய்ய விரும்­பு­கிறது.