பயங்கரவாதத் தாக்குதல்: நம்பகமான வேவுத் தகவல் இல்லை

பயங்கரவாதத் தாக்குதல்: நம்பகமான வேவுத் தகவல் இல்லை

1 mins read
afbf2440-cb27-4e52-85a4-69cf33cb7ab5
-

சிங்­கப்­பூ­ரில் பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல் நடத்­தப்­ப­டு­வ­தற்­கான

அச்­சு­றுத்­தல் தொடர்­பாக குறிப்­பிட்ட, நம்­ப­க­மான வேவுத் தக­வல் ஏதும் இல்லை என்று உள்­நாட்­டுப் பாது­காப்­புத்­துறை தெரி­வித்­துள்­ளது.

தென்­கி­ழக்­கா­சிய நாடு­களில் பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல் நடத்­தப்­

ப­டக்­கூ­டும் என்று அண்­மை­யில் ஜப்­பா­னிய வெளி­யு­றவு அமைச்சு இவ்­வட்­டார நாடு­களில் வசிக்­கும் அதன் குடி­மக்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­தது.

இந்த விவ­கா­ரம் குறித்து ஜப்­பா­னிய உள­வுத்­து­றை­யு­டன் தொடர்பு கொண்­ட­தாக உள்­நாட்­டுப்

பாது­காப்­புத்­துறை கூறி­யது.

பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல் நடை­பெ­று­வது தொடர்­பான நம்­ப­க­மான வேவுத் தக­வல் இல்­லா­த­போ­தி­லும் தொடர்ந்து விழிப்­பு­டன் இருக்­கும்­

ப­டி­யும் சந்­தே­கத்­துக்­கு­ரிய நட­வ­டிக்­கை­கள் அல்­லது நபர்­க­ளைப் பார்த்­தால் உட­ன­டி­யாக 1800-2626-473 என்ற எண் மூலம் உள்­நாட்­டுப் பாது­காப்­புத் துறை­யு­டன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு பொது­மக்­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­

பட்­டுள்­ளது.