வீவக: வீடுகளைக் கட்டும் நிறுவனங்களுக்கு உதவி

வீவக: வீடுகளைக் கட்டும் நிறுவனங்களுக்கு உதவி

2 mins read
a095d401-55c1-4674-bc63-2afaac32ad4c
-

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீட்­டுத் திட்­டங்­க­ளைக் கட்­டி­வ­ரும் நிறு­வ­னங்­க­ளுக்கு எஃகு விலை ஏற்ற இறக்­கத்­தி­லி­ருந்து இன்­னும் ஒன்­பது மாதங்­க­ளுக்கு பாது­காப்பு­அளிக்க கழ­கம் எடுத்த நட­வ­டிக்­கை­யால் இங்­குள்ள 35 வீட்­டுத் திட்­டங்­கள் பயன்­பெ­ற­வுள்­ளன.

கழ­கம் இதன் தொடர்­பில் நேற்று அறிக்கை விடுத்­தது.

கழக வீட்­டுத் திட்­டங்­கள் சீராக நடை­பெ­று­வ­தை­யும் வீடு­களை வாங்கு­வோ­ருக்கு தாம­தத்­தைக் குறைக்­க­வும் அந்த வீடு­க­ளைக் கட்­டி­வ­ரும் நிறு­வ­னங்­க­ளுக்கு உதவி வழங்­கப்­படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சு அண்­மை­யில் கூறி­யது.

கழ­கம் வழங்­கும் எஃகு விலைப் பாது­காப்பை மேலும் ஒன்­பது மாதங்­கள் நீட்­டிப்­ப­தும் அவற்­றில் அடங்­கும் என்று அமைச்சு கடந்த திங்­கட்­கி­ழமை நாடா­ளு­மன்­றத்­தில் அளித்த எழுத்­து­பூர்வ பதி­லில் தெரி­வித்­தி­ருந்­தது.

அந்­தப் பாது­காப்பு நீட்­டிக்­கப் ­ப­டு­வ­தால் எஃகு விலை­கள் ஏறு­வ­தைப் பற்றி கட்­டு­மான நிறு­வ­னங்­கள் கவலை கொள்­ளத் தேவை­யில்லை என்­றது அமைச்சு.

அத்­து­டன் உள்­ளூ­ரில் மேற்­கொள்­ளப்­படும் கட்­டட முன்­த­யா­ரிப்­புக்கு கூடு­த­லான கான்­கி­ரீட் பொருட்­க­ளை­யும் கழ­கம் குத்­தகை நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கும் என்று அமைச்சு கூறி­யி­ருந்­தது.

நிறு­வ­னங்­கள் தங்­கள் குத்­தகை ஆவ­ணத்­தில் குறிப்­பிட்­டதைவிட கூடு­தல் சிமிண்ட், மணல் உள்­ளிட்ட பொருட்­கள் வழங்­கப்­படும்.

முன்னதாக கழ­கம், 18 அல்­லது 22 மாதங்­க­ளுக்கு எஃகு விலைப் பாது­காப்பை வழங்கி வந்­தது.

ஆனால், வழக்­க­மாக இந்­தத் கால­கட்­டத்­தில் முடிந்­து­வி­டும் வீட்­டுக் கட்­டு­மா­னத் திட்­டங்­கள் கொவிட்-19 கிரு­மிப்­ ப­ர­வ­லால் தாம­தம் அடைந்­துள்­ளன.

எஃகு விலைப் பாது­காப்பு ஒன்­பது மாதங்­கள் நீட்­டிக்­கப்­ப­டு­வ­தால், 2020ஆம் ஆண்டு ஜன­வ­ரி­யில் வீட்­டுத் திட்­டத்­தைத் தொடங்­கிய ஒரு நிறு­வ­னத்துக்கு மார்ச் 2022 வரை எஃகு விலை ஏற்ற இறக்­கத்­தி­லி­ருந்து பாது­காப்புக் கிடைக்­கும்.

இந்த ஆண்டு ஜன­வ­ரி­யி­லி­ருந்து எஃகு விலை 25 விழுக்­கா­டும் கான்­கி­ரீட் பொருட்­க­ளின் விலை 15 விழுக்­கா­டும் உயர்ந்­துள்­ளன.