கனவை எட்ட சிறுமிகளுக்கு ஊக்கம் தந்த பெண் ஆளுமை

கனவை எட்ட சிறுமிகளுக்கு ஊக்கம் தந்த பெண் ஆளுமை

1 mins read
7e328a91-5dae-4a32-b3e1-c6a95bd91163
இளம் பருவ நினைவுகள், புகைப்படம் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்ட அமைச்சர் இந்திராணி ராஜா. படங்கள்: ஃபேஸ்புக்/ இந்திராணி ராஜா -
multi-img1 of 2

கேலிச்­சித்­தி­ரங்­களும் புத்­த­கங்­களும் படிக்­கப் பிடிக்­கும், கற்­ப­னைக் குதி­ரை­யில் வெகு­தூ­ரம் சென்ற சிறுமி.

பள்­ளியை மிக­வும் விரும்­பிய சிறுமி. தமது ஐந்து வயதில் தந்தை கால­மா­ன­போது தாயின் கடும் உழைப்பை உணர்ந்து படித்த சிறுமி. தம்­மால் முடி­யுமா என்ற சந்­தே­கத்­தைக் கடந்து படித்து, வழக்­க­றி­ஞ­ராகி பின்­னா­ளில் பிர­த­மர் அலு­வ­லக அமைச்­ச­ரா­னார்.

'இந்­தச் சிறுமி நான்­தான்' எனும் சமூக ஊடக இயக்­கத் தின் ஒரு பகு­தி­யாக தமது நினை­வு­களை ஃபேஸ்புக் பக்­கத்­தில் பகிர்ந்­து­கொண்­டார் திரு­வாட்டி இந்­தி­ராணி. சிண்டாவின் இணையப்பக்கத்தில் அது நேற்று தமி­ழி­லும் ஆங்­கி­லத்­தி­லும் பதிவிடப்பட்டது.

'இன்ஸ்­ப­ய­ரிங் கேர்ல்ஸ் இன்­டர் நேஷ­னல்' எனும் அமைப்­பின் சிங்­கப்­பூர் கிளை இந்த இயக்கத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் கன­வு­களை எட்டிப் பிடிக்க சிறு­மி­களை ஊக்­கு­விக்­க பெண் ஆளு­மை­கள் தாங்கள் சிறுமியாக இருந்த நினை­வு­ களைப் பகிர்ந்துள்­ள­னர்.

"சிறுமிகளே! என்னுடைய வெற்றியின் இரகசியம் - ­ நீங்களாக இருங்கள், உங்கள் கனவுகளை நோக்கி செல்லுங்கள், உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள்," ஊக்கம் தந்தார் அமைச்சர் இந்திராணி.