லிட்டில் இந்தியா செல்லவிருக்கும் ஊழியர்களைத் தங்குவிடுதி நடத்துநர்கள் தேர்ந்தெடுப்பர்

வெளிநாட்டு ஊழியர்களைப் படிப்படியாக சமூகத்திற்குள் ஒருங்கிணைக்க பல காலமாக ஒத்திவைக்கப்பட்டு வந்த முன்னோடித் திட்டம், நேற்று வெற்றிகரமாகத் தொடங்கியது. வாரந்தோறும் 500 ஊழியர்கள் மட்டுமே லிட்டில் இந்தியாவுக்குச் செல்ல அனுமதிக்கப்படும் நிலையில், தகுதிபெறும் ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பது தங்குவிடுதி நடத்துநர்களின் பொறுப்பாகும்.

இம்முன்னோடித் திட்டத்தின்கீழ் தகுதிபெறும் தங்குவிடுதிகளை மனிதவள அமைச்சு அடையாளம் காணும். பின்னர், ஊழியர்களின் பயணத்தைத் தகுந்தாற்போல் திட்டமிடும் என்று மனிதவள அமைச்சின் உத்தரவாத, பராமரிப்பு, ஈடுபடுத்துதல் குழுத் தலைவர் துங் யுய் ஃபாய் தெரிவித்தார்.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள் மட்டுமே சமூக கலந்துறவாடல்களுக்குத் தகுதிபெறுவர் என்று மனிதவள அமைச்சு கடந்த வாரம் கூறியிருந்தது. புதன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளன்று ஆறு மணி நேரம் வரை தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர்கள் சமூகத்தில் உலாவலாம்.
காலை, பகல் என இரு வேறு நேரங்கள் தரப்படும். ஒவ்வொரு நேரத்திலும் கிட்டத்தட்ட 80 ஊழியர்கள் வெளியே செல்லலாம்.

கடந்த இரு வாரங்களாக ஊழியர்கள் இருக்கும் தங்குவிடுதியில் எந்த ஒரு கொவிட்-19 சம்பவமும் பதிவாகியிருக்கக்கூடாது. வளாகத்தில் குறைந்தது 90% தடுப்பூசி விகிதம் இருப்பதும் அவசியம். மேலும், பாதுகாப்பான வசிப்பிட நடைமுறைகள் நடப்பில் இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் சமூக கலந்துறவாடலுக்குத் தங்குவிடுதிவாசிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இருப்பினும், பட்டியலில் இடம்பெறும் தங்குவிடுதியில் திடீரென புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்படலாம் என்ற பட்சத்தில், பட்டியல் உறுதியானது அல்ல என்றார் திரு துங்.
ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் பேருந்துகளில் தங்குவிடுதியிலிருந்து லிட்டில் இந்தியாவுக்கும் மீண்டும் தங்குவிடுதிக்கும் ஊழியர்கள் கொண்டு செல்லப்படுவர். ஒரே தங்குவிடுதியைச் சேர்ந்தவர்களை ஒவ்வொரு பேருந்தும் ஏற்கும்.

தங்குவிடுதியிலிருந்து கிளம்பும் முன் ஆண்டிஜன் விரைவு பரிசோதனையை (ஏஆர்டி) ஊழியர்கள் செய்துகொள்ள வேண்டும்.

தங்குவிடுதிக்குத் திரும்பிய பின், மூன்றாவது நாளன்று அதே ‘ஏஆர்டி’யை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
வழிபாட்டுத் தலங்களில் அனுமதிக்கப்படும் ஊழியர்களுக்குக் கையில் அணிந்துகொள்ள பட்டைகள் தரப்படும். மேலும், அப்பகுதிக் கடைகளில் பொருள் வாங்கக் கட்டணக் கழிவும் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் தங்குவிடுதிவாசிகளுக்கு இத்தகைய விதிமுறைகள் யாவும் விளக்கப்படும். லிட்டில் இந்தியாவில் அவர்கள் இருக்கவேண்டிய பகுதியை விட்டு அவர்கள் போகக்கூடாது என்றும் தெரிவிக்கப்படும். அவர்கள் உலாவுவதற்கான பகுதியில் அனைத்து வசதிகளும் உள்ளன என்பதால் அதைத் தெரிவு செய்ததாக திரு துங் குறிப்பிட்டார்.

இந்த முன்னோடித் திட்டம், முக்கியமானதொரு முதல் படி என்று கூறிய திரு துங், அனுமதிக்கப்படும் ஊழியர் எண்ணிக்கை குறைவு என்ற சாடல் இருந்து வருவதைத் தாம் அறிவதாகக் குறிப்பிட்டார். இருப்பினும், தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில், முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!