புதுவிதக் கொண்டாட்டம், புதுவகை முயற்சிகள்

புதுவிதக் கொண்டாட்டம், புதுவகை முயற்சிகள்

3 mins read
652298c8-5257-4880-b80e-4cecb574c3dc
கின்னஸ் உலகச் சாதனை படைத்த ரங்கோலி கலைஞர் திருமதி விஜயா மோகன் உருவாக்கிய இப்படைப்பில், ரங்கோலி வடிவில் காகிதப் பூக்கள் வைக்கப்பட்டு உள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

- இந்து இளங்­கோ­வன்

பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளைப் பின்­பற்­றி­ய­வாறு பெரி­ய­ள­வி­லான தீபா­வ­ளிச் சந்தை, மக்­க­ளுக்­கான பிரம்­மாண்ட மேடை நிகழ்ச்­சி­கள் போன்­றவை இல்­லா­மல் கடந்த ஆண்டு தீபா­வளிக் கொண்­டாட்­டம் நடந்து முடிந்­தது. இந்த ஆண்டு தீபா­வ­ளிக்­காக இணை­யம் வழி உற்­சா­க­மூட்­டும் புது­வித முயற்­சி­களில் இறங்­கி­யுள்­ளது லிஷா எனப்­படும் லிட்­டில் இந்­தியா கடைக்­கா­ரர்­கள் மற்றும் மரபுடைமைச் சங்­கம்.

சிறு­வர் முதல் பெரி­ய­வர் வரை அனைத்து வய­தி­ன­ரை­யும் கவ­ரும் வண்­ணம் இணைய நிகழ்ச்­சி­களும் நேர­டிப் போட்­டி­களும் இம்­மா­தம் 25ஆம் தேதி தொடங்கி நவம்­பர் 5ஆம் தேதி வரை இடம் பெற­வுள்­ளன.

தீபா­வ­ளிக் குதூ­க­லத்­தைக் தொடங்­கி­வைக்­கும் ஒளி­யூட்டு நிகழ்ச்சி மெய்­நி­க­ராக இம்­மா­தம் 25ஆம் தேதி­யன்று நடை­பெ­ற­வுள்­ளது. தொலைக்­காட்­சி­யில் ஒளி­யே­றும் இந்­நி­கழ்ச்­சி­யில் மனி­த­வள அமைச்­சர் டாக்­டர் டான் சீ லெங் கலந்­து­கொண்டு சிறப்­பிப்­பார்.

இந்த ஆண்டு தீபா­வளி ஒளி­யூட்­டின் முக்­கிய அலங்­கா­ர­மாக கோவில் கோபு­ரம் இடம்­பெ­று­கிறது. மகிழ்ச்சி பொங்­கும் கொண்­டாட்ட உணர்வை வர­வேற்­ப­தோடு, நமது கவ­லை­களை விட்­டு­விட்டு ஒரு­மித்த நல்­லெண்­ணத்­தோடு செயல்­படு­வதை இந்த அலங்­கா­ரம் சித்­தி­ரிக்­கிறது.

'டிக் டாக்' போட்டி, புகைப்­ப­டப் போட்டி, 'Smule' என்ற கைபேசிச் செயலி வழி நடத்­தப்­படும் தீபா­வளி 'கரா­வோக்கே' போட்டி, இந்­தி­யா­வின் ஈரோடு மகேஷ் தலை­மை­யில் நடக்­கும் இணைய 'பார்ட்டி' மன்­றம் என மாற்­றங்­களை வர­வேற்று புத்­தாக்­கத்தை முன்­னி­றுத்தி கொண்­டாட்ட நிகழ்­வு­க­ளுக்கு லிஷா ஏற்­பாடு செய்­தி­ருக்­கிறது.

இணை­யம் வழி மக்­களை உற்­சா­கப்­ப­டுத்­து­வ­தோடு நின்­று­வி­டாமல், குடும்­பத்­து­டன் விளை­யாட 'கஜானா' புதை­யல் வேட்டை, கின்­னஸ் உலகச் சாதனை படைத்த ரங்­கோலி கலை­ஞர் திரு­மதி விஜயா மோக­ன் சமூ­கத்­தினருடன் சேர்ந்து உரு­வாக்­கிய காகி­தப் பூ ரங்­கோ­லி­யின் கண்­காட்சி போன்ற நிகழ்ச்சி­களும் இடம்­பெ­ற­வுள்­ளன.

"லிஷா 21 ஆண்­டு­க­ளாக தீபா­வளி ஒளி­யூட்­டை­யும் பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளை­யும் இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் ஆத­ர­வோடு நடத்தி வரு­கிறது. தீபா­வளிக் கொண்­டாட்­டங்­கள் பெரிய அள­வில் நடத்­தப்­பட்டு வந்­த­போ­தும் சென்ற ஆண்டு முதல்­மு­றை­யாக இணை­யம் வழி கொண்­டாட்ட நிகழ்ச்­சி­களை நடத்­தி­னோம்.

"பெரிய அள­வி­லான நிகழ்ச்­சி­களை மக்­கள் நேர­டி­யாக வந்து பார்க்க முடி­யா­மல் போனா­லும் இணை­யம் வழி மிக எளி­மை­யாக எங்­க­ளால் இணைய முடி­கிறது. முன்­பெல்­லாம் 5000 பேர் நேர­டி­யாக வந்து கண்­டு­க­ளிக்­கும் ஒளி­யூட்டு நிகழ்ச்­சியை இப்­போது பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோர் காண முடி­கிறது. வெளி­நா­டு­களில் வாழும் சிங்­கப்­பூ­ரர்­களும் பார்க்க முடி­கிறது. கொவிட்-19 சூழ­லால் தீபா­வளிக் கொண்­டாட்­டங்­களை மிக வித்­தி­யா­ச­மான கண்­ணோட்­டத்­தில் காண­வும் நிகழ்ச்­சி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­ய­வும் முடி­கிறது.

"இந்த ஆண்டு கொண்­டாட்­டங்­களில் இளை­யர்­க­ளின் ஈடு­பாடும் பிற இனத்­த­வ­ரின் பங்­கேற்­பும் அதி­கம் இருக்­கும் என்று எதிர்­பார்க்­கி­றோம்," என்­றார் லிஷா­வின் ஆலோ­ச­க­ரும் முன்­னாள் தலை­வரு­மான திரு ராஜ்­கு­மார் சந்திரா.

லிஷா­வு­டன் கைகோத்து இந்­திய மர­பு­டைமை நிலை­ய­மும் வசந்­தம் ஒளி­வ­ழி­யும் மக்­களை உற்­சாகப்­ப­டுத்த பல்­வகை நிகழ்ச்­சி­களுக்கு ஏற்­பாடு செய்­துள்­ளன.

மக்­க­ளைக் குதூ­க­லப்­ப­டுத்­தி­னால் மட்­டும் போதாது, அவர்­களுக்கு ஆத­ர­வும் அளிக்க வேண்­டும் என்ற நோக்­கத்­தில், சிண்டா எனும் சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கம், தீபா­வ­ளியை முன்­னிட்டு கிட்­டத்­தட்ட 2000 வச­தி­குறைந்த குடும்­பங்­க­ளுக்கு உண­வுப் பொட்­ட­லங்­கள் வழங்­க­வுள்­ளது.

மேலும், லிட்­டில் இந்­தி­யா­வில் புதைந்து கிடக்­கும் பழைய நினைவு­களை மீண்­டும் கண்­முன் கொண்டு­வர, தனிமையில் வாழும் மூத்­தோரை லிட்­டில் இந்­தியா சுற்­று­லா­வுக்கு சிண்டா அழைத்து வரும்.

அமைச்­சர்­கள் டாக்­டர் டான் சீ லெங், குமாரி இந்­தி­ராணி ராஜா, திரு ஆல்­வின் டான் ஆகி­யோ­ரு­டன் மேயர் டெனிஸ் புவா, லிஷா தலை­வர் திரு சங்­கரநாதன் ஆகி­யோ­ரும் ஒரு பெரிய மயில் வடி­வி­லான மித­வை­யில் வலம் வரு­வது ஒளி­யூட்டு நிகழ்ச்­சி­யின் மற்­றொரு சிறப்­பம்­ச­மாக இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஒளி­யூட்டு விழா­விற்­குப்­பின் இந்த மித­வை­கள் சிராங்­கூன் ரோடு, ரேஸ் கோர்ஸ் ரோடு, சையது ஆல்வி ரோடு ஆகிய இடங்­களில் மக்­க­ளின் பார்­வைக்கு வைக்­கப்­படும். அவற்­றின் அருகே அவர்­கள் புகைப்­ப­டங்­கள் எடுத்­துக்­கொள்­ள­வும் வச­தி­யாக இருக்­கும்.

பல்­லி­னச் சமு­தா­யத்­திற்கு வலு சேர்க்­க­வேண்­டும் என்­பது லிஷா­வின் தீபா­வளிக் கொண்­டாட்­டங்­களின் முக்­கிய நோக்­க­மாக உள்­ளது. இந்த ஆண்­டும் கொண்­டாட்­டங்­களில் பிற இனத்­த­வர் கலந்­து­கொள்ள பல ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இந்த நிகழ்ச்­சி­க­ளின் வழி அவர்­கள் இந்­தியக் கலா­சா­ரம் பற்­றிய புரி­தலை அதி­கப்­ப­டுத்­திக்­கொள்­வர் என்று நம்­பு­கிறது லிஷா.

தீபா­வளிக் கொண்­டாட்ட நிகழ்ச்சி­கள் பற்­றிய மேல்­வி­வ­ரங்­களுக்கு இந்த இணை­யப்­பக்­கத்தை நாட­லாம்: https://www.deepavalisg.com/eventlist