இரண்டு தாதிமை இல்லங்களில் கிருமிக் குழுமங்கள்

இரண்டு தாதிமை இல்லங்களில் கிருமிக் குழுமங்கள்

1 mins read
69c05c66-8195-4fe7-850a-0934258611bb
-

சிங்கப்பூரில் உறுதிசெய்யப்பட்ட கொவிட்-19 தொற்றுக் குழுமங்களின் பட்டியலில், நேற்று முன்தினம் இரண்டு தாதிமை இல்லங்கள் சேர்க்கப்பட்டன. சீமெயில் உள்ள 'ஆரஞ்ச் வேலி நர்சிங் ஹோம்' மற்றும் வெஸ்ட் கோஸ்ட் டிரைவில் உள்ள 'ஜாமியா நர்சிங் ஹோம்' இரண்டிலும் தலா 13 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. ஆரஞ்ச் வேலியில் பதிவான கொவிட்-19 நோயாளிகள் அனைவரும் தாதிமை இல்லவாசிகள். ஜாமியா இல்லத்தில் பாதிக்கப்பட்டோரில் இல்லவாசிகள் 10 பேர், எஞ்சிய மூவர் பணியாளர்கள் ஆவர். புதன்கிழமையன்று சமூகத்தில் 770 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டன. ஓர் ஆண்டில் பதிவான ஆக அதிக எண்ணிக்கை இது. 34 தங்குவிடுதிவாசிகளுக்கும் நேற்று முன்தினம் கொவிட்-19 இருப்பது உறுதியானது.