'கொவிட்-19 தடுப்பூசிக்குப்பின் இரு வாரம் காத்திருக்கவும்'

'கொவிட்-19 தடுப்பூசிக்குப்பின் இரு வாரம் காத்திருக்கவும்'

2 mins read
b59eae07-5011-4575-90a5-38e2e1c2af88
-

கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூசி­யைப் போட்­டுக்­கொண்­ட­வர்­கள், குறிப்­பாக இளை­யர்­கள், ஒரு வாரத்­திற்­குப் பதில் இரண்டு வாரங்­கள் காத்­தி­ருந்த பிறகு எடை தூக்­கு­தல் போன்ற கடி­ன­மான உடற்­ப­யிற்­சி­களை மேற்­கொள்­ளு­மாறு கொவிட்-19 தடுப்­பூ­சிக்­கான நிபு­ணர் குழு அறி­வுறுத்­தி­யுள்­ளது.

அதோடு தங்­க­ளின் முதல் 'எம்­ஆர்­என்ஏ' தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்ட பிறகு, மித­மான ஒவ்­வாமை பாதிப்­பு­க­ளுக்கு உள்­ளா­ன­வர்­கள், அதே தடுப்­பூ­சியை இரண்­டா­வது மற்­றும் அடுத்த முறை போட்­டுக்­கொள்ள இனி தகு­தி­பெ­ற­லாம் என்­றும் அதன் புதிய அறி­வு­றுத்­தல் குறிப்­பில் குழு தெரி­வித்­தி­ருந்­தது.

தடுப்­பூ­சி­யின் பாது­காப்பு தொடர்­பான தர­வு­களை மறு­ஆய்வு செய்­ததை அடுத்து நிபு­ணர்க் குழு இப்­ப­ரிந்­து­ரை­களை முன்­வைத்­துள்­ள­தாக சுகா­தார அமைச்சு குறிப்­பிட்­டது.

மார­டைப்பு, இத­யத்­தைச் சுற்றி­யுள்ள ஜவ்­வின் அழற்சி ஆகியவை ஏற்­படும் சிறு அபா­யம், தடுப்­பூ­சிக்­குப் பிறகு இருக்கும் என்று உள்­ளூர் மற்­றும் வெளி­நாட்­டுத் தர­வு­கள் தொடர்ந்து காட்டி வரு­கின்­றன. அதி­லும், இரண்­டா­வது தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்ட இளை­யர்­கள் பெரும்­பான்­மை­யாக உள்­ள­தாக நிபு­ணர் குழு தெரி­வித்­தது.

பெண்­க­ளைக் காட்­டி­லும் ஆண்­க­ளி­டம் இந்த இரு அழற்சி அறி­கு­றி­களும் காணப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

முன்­ன­தாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஒரு வாரத்­தில் இத்­தகைய பாதிப்­பு­கள் ஏற்­பட்­ட­ சம்­ப­வங்­கள் பதி­வா­கின. ஆனால் இரண்­டா­வது வாரத்­தி­லும் இது நடப்­ப­தாக சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்­திற்­குப் புகார்­கள் வரத் தொடங்­கி­யுள்­ள­தாக குழு கூறி­யது.

இத­னால், தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பிறகு இரண்டு வாரம் காத்­தி­ருந்து கடி­ன­மான உடற்­பயிற்­சி­களில் ஈடு­ப­டு­வது சிறப்பு என்று தற்­போது அறி­வு­றுத்­தப்­படு­கிறது.

முதல் 'எம்­ஆர்­என்ஏ' தடுப்­பூசி­யைப் போட்ட பிறகு, மித­மான தோல் பாதிப்­பு­கள் ஏற்­பட்டு அடுத்த தடுப்­பூ­சிக்­குத் தகுதி பெறா­தோர், இனி தங்­க­ளின் அடுத்த தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள முடி­யும். கொவிட்-19 'எம்­ஆர்­என்ஏ' தடுப்­பூ­சி­க­ளின் பாது­காப்பு தொடர்­பில் அனைத்­து­லக அள­வில் கிடைத்­துள்ள கூடு­தல் ஆதா­ரங்­க­ளைக் கொண்டு இது சாத்­தி­யம் என்று நிபு­ணர் குழு தெரி­வித்­துள்­ளது.