கிருமி நீக்கப் பணிக்குப் பிறகு சைனாடவுன் காம்பிளக்ஸ் திறப்பு

2 mins read
c9dadda9-a9b4-492f-bd92-3b4d587e3248
நேற்றுக் காலை வெறிச்சோடிக் காணப்பட்ட சைனாடவுன் காம்பிளக்ஸ் உணவு நிலையம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கிட்­டத்­தட்ட மூன்று நாட்­க­ளாக மூடி­யி­ருந்த சைனா­ட­வுன் காம்பி­ளக்ஸ், நேற்று மீண்­டும் செயல்­ப­டத் தொடங்­கி­யது. ஆனால் பெரும்­பாலான கடை­கள் மூடியே இருந்­தன. வரு­கை­யா­ளர்­களும் அங்­கொருவர் இங்­கொருவரு­மா­க காணப்­பட்­ட­னர்.

கொவிட்-19 தொற்­றுக் குழு­மம் அங்கு உரு­வா­கி­யதை அடுத்து ஏறத்­தாழ 700 கடை­க­ளைக் கொண்­டுள்ள இந்த வளா­கம், கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை பிற்­ப­கல் 3 மணி­மு­தல் மூடப்­பட்­டது. சுத்­தம் செய்­யும் பணி­களும் கிருமி நீக்­கப் பணி­களும் மும்­மு­ர­மாக நடந்­ததை அடுத்து மீண்­டும் நேற்று திறந்­தது.

இதற்­கி­டையே சைனா­ட­வுன் காம்பி­ளக்ஸ் தொடர்­பி­லான கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­தில் நேற்று முன்­தின நில­வ­ரப்­படி 197 சம்­ப­வங்­கள் பதி­வா­கி­விட்­டன. தொற்­றால் பாதிக்­கப்­பட்ட பெரும்­பா­லா­னோர், வளா­கத்­தில் வேலை பார்க்­கும் கடைக்­கா­ரர்­கள் மற்­றும் கடை உதவி­யா­ளர்­கள் ஆவர்.

மூத்­தோர் தங்­க­ளின் நண்­பர்­களைச் சந்­திப்­ப­தற்­குப் பொது­வாக இந்த வளா­கத்­தில் அமைந்­துள்ள உணவு நிலை­யத்தை நாடி வரு­வர். ஆனால், நேற்று அது­வும் வெறிச்­சோ­டிக் காணப்­பட்­டது.

வளா­கத்­தின் 260 உண­வுக் கடை­களில் கிட்­டத்­தட்ட 10 கடை­கள் மட்­டுமே திறந்­தி­ருந்­தன. வாடிக்­கை­யா­ளர்­கள் உட்­கார்ந்து சாப்­பிடு­வ­தை­யும் பார்க்க முடி­ய­வில்லை.

இந்­திய உண­வுக் கடை­யான 'நைட்ஸ் கிச்­சன்' உரி­மை­யா­ளர், காலை 8 மணி­யி­லி­ருந்து பிற்­ப­கல் 1.30 மணி­வரை எட்டு பிரி­யாணி பொட்­ட­லங்­கள் மட்­டுமே விற்­பனை ஆன­தா­கக் கூறி­னார். மற்ற நாட்­களில் அதே நேரத்­தில் சுமார் 100 பொட்­ட­லங்­க­ளா­வது விற்­றி­ருக்­கும் என்று தெரி­வித்­தார்.

மாதந்­தோ­றும் $600 வாடகை செலுத்­தும் 56 வயது திரு நைட், தம்­மு­டைய குடும்­பத்­துக்­காக வரு­மா­னம் ஈட்­டத் தம் கடை­யைத் திறந்து வைத்­தி­ருப்­ப­தா­கக் கவலை­யு­டன் பகிர்ந்­து­கொண்­டார்.