லிட்டில் இந்தியா செல்லவிருக்கும் ஊழியர்களைத் தங்குவிடுதி நடத்துநர்கள் தேர்ந்தெடுப்பர்

லிட்டில் இந்தியா செல்லவிருக்கும் ஊழியர்களைத் தங்குவிடுதி நடத்துநர்கள் தேர்ந்தெடுப்பர்

2 mins read
e81bd97c-d88c-416f-988c-c4ab8f67988b
-

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைப் படிப்­படி­யாக சமூ­கத்­திற்­குள் ஒருங்­கிணைக்க பல கால­மாக ஒத்­தி­வைக்­கப்­பட்டு வந்த முன்­னோ­டித் திட்­டம், நேற்று முன்­தி­னம் வெற்றி­க­ர­மா­கத் தொடங்­கி­யது. வாரந்­தோறும் 500 ஊழி­யர்­கள் மட்­டுமே லிட்­டில் இந்­தி­யா­வுக்­குச் செல்ல அனு­ம­திக்­கப்­படும் நிலை­யில், தகுதி­பெ­றும் ஊழி­யர்­க­ளைத் தேர்ந்­தெ­டுப்­பது தங்­கு­வி­டுதி நடத்­து­நர்­க­ளின் பொறுப்­பா­கும்.

இம்­முன்­னோ­டித் திட்­டத்­தின்­கீழ் தகு­தி­பெ­றும் தங்­கு­வி­டு­தி­களை மனி­த­வள அமைச்சு அடை­யா­ளம் காணும். பின்­னர், ஊழி­யர்­க­ளின் பய­ணத்­தைத் தகுந்­தாற்­போல் திட்­ட­மி­டும் என்று மனி­த­வள அமைச்­சின் உத்­த­ர­வாத, பரா­ம­ரிப்பு, ஈடு­படுத்­து­தல் குழுத் தலை­வர் துங் யுய் ஃபாய் தெரி­வித்­தார்.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஊழி­யர்­கள் மட்­டுமே சமூக கலந்­து­ற­வா­டல்­க­ளுக்­குத் தகு­தி­பெ­று­வர் என்று மனி­த­வள அமைச்சு கடந்த வாரம் கூறி­யி­ருந்­தது. புதன், சனி, ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளன்று ஆறு மணி நேரம் வரை தேர்ந்­தெ­டுக்­கப்­படும் ஊழி­யர்­கள் சமூ­கத்­தில் உலா­ வ­ரலாம்.

காலை, பகல் என இரு வேறு நேரங்­கள் தரப்­படும். ஒவ்­வொரு நேரத்­தி­லும் கிட்­டத்­தட்ட 80 ஊழி­யர்­கள் வெளியே செல்­ல­லாம்.

கடந்த இரு வாரங்­க­ளாக ஊழி­யர்­கள் இருக்­கும் தங்­கு­வி­டு­தி­யில் எந்த ஒரு கொவிட்-19 சம்­ப­வ­மும் பதி­வா­கி­யி­ருக்­கக்­கூ­டாது. வளாகத்­தில் குறைந்­தது 90% தடுப்­பூசி விகி­தம் இருப்­ப­தும் அவ­சி­யம். மேலும், பாது­காப்­பான வசிப்­பிட நடை­மு­றை­கள் நடப்­பில் இருக்க வேண்­டும். இதன் அடிப்­ப­டை­யில் சமூக கலந்­து­ற­வா­ட­லுக்­குத் தங்கு­வி­டு­தி­வா­சி­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­படு­வர்.

இருப்­பி­னும், பட்­டி­ய­லில் இடம்­பெ­றும் தங்­கு­வி­டு­தி­யில் திடீ­ரென புதிய கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் உறு­தி­செய்­யப்­ப­ட­லாம் என்ற பட்­சத்­தில், பட்­டி­யல் உறு­தி­யா­னது அல்ல என்­றார் திரு துங்.

ஏற்­பாடு செய்­யப்­பட்ட சிறப்­புப் பேருந்­து­களில் தங்­கு­வி­டு­தி­யி­லிருந்து லிட்­டில் இந்­தி­யா­வுக்­கும் மீண்­டும் தங்­கு­வி­டு­திக்­கும் ஊழி­யர்­கள் கொண்டு செல்­லப்­ப­டு­வர். ஒரே தங்­கு­வி­டு­தி­யைச் சேர்ந்­த­வர்­களை ஒவ்­வொரு பேருந்­தும் ஏற்­கும்.

தங்­கு­வி­டு­தி­யி­லி­ருந்து கிளம்­பும் முன் ஆண்­டி­ஜன் விரைவு பரி­சோ­த­னையை (ஏஆர்டி) ஊழி­யர்­கள் செய்­து­கொள்ள வேண்­டும்.

தங்­கு­வி­டு­திக்­குத் திரும்­பிய பின், மூன்­றா­வது நாளன்­று அதே 'ஏஆர்டி'யை அவர்கள் மேற்­கொள்ள வேண்­டும்.

வழி­பாட்­டுத் தலங்­களில் அனு­மதிக்­கப்­படும் ஊழி­யர்­க­ளுக்­குக் கையில் அணிந்­து­கொள்ள பட்­டை­கள் தரப்­படும். மேலும், அப்­ப­கு­திக் கடை­களில் பொருள் வாங்­கக் கட்­ட­ணக் கழி­வும் வழங்­கப்­படும்.

தேர்ந்­தெ­டுக்­கப்­படும் தங்­கு­விடுதி­வா­சி­க­ளுக்கு இத்­த­கைய விதி­மு­றை­கள் யாவும் விளக்­கப்­படும். லிட்­டில் இந்­தி­யா­வில் அவர்­கள் இருக்­க­வேண்­டிய பகு­தியை விட்டு அவர்­கள் போகக்­கூ­டாது என்­றும் தெரி­விக்­கப்­படும். அவர்­கள் உலா­வு­வ­தற்­கான பகு­தி­யில் அனைத்து வச­தி­களும் உள்­ளன என்­ப­தால் அதைத் தெரிவு செய்­­த­தாக திரு துங் குறிப்­பிட்­டார்.

இந்த முன்­னோ­டித் திட்­டம், முக்­கி­ய­மா­ன­தொரு முதல் படி என்று கூறிய திரு துங், அனு­ம­திக்­கப்­படும் ஊழி­யர் எண்­ணிக்கை குறைவு என்ற சாடல் இருந்து வரு­வ­தைத் தாம் அறி­வ­தா­கக் குறிப்­பிட்­டார். இருப்­பி­னும், தொற்று எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரும் இக்­கா­ல­கட்­டத்­தில், முன்­னெச்­ச­ரிக்­கை­யாக இருப்­பது நல்­லது என்­றார்.