பேருந்து திடீரென்று நின்றதால் காயமுற்ற முதியவர் மாண்டார்

கடந்த எட்­டாம் தேதி எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் பேருந்து ஒன்று திடீ­ரென்று நின்றதால் நிலை தடு­மாறி கீழே விழுந்து கடு­மை­யா­கக் காய­ம­டைந்த முதி­ய­வர் நேற்று உயி­ரி­ழந்­தார்.

அச்­சம்­ப­வத்­தில் திரு சியா கியொக் தியாங், 68, எனும் அந்­ந­ப­ருக்கு தலை­யில் காய­மும் பல இடங்­களில் எலும்பு முறி­வும் உண்­டா­யின. விலா எலும்பு முறிந்­த­தில் நுரை­யீ­ரல் பாதிக்­கப்­பட்­டது.

சுமார் ஒரு வாரம் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் இருந்த திரு சியா நேற்று காலை ஏழு மணி­ய­ள­வில் உயி­ரி­ழந்­தார்.

கடந்த 8ஆம் தேதி காலை 11.50 மணிக்கு, பேருந்து சேவை எண் 175ல் சம்­ப­வம் நடந்­தது.

சாக்கியதித்தா- தேசிய சிறுநீரக நிலையத்தின் கிளைக்குச் சென்றுவிட்டு, திரு சியா பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

நார்த் பிரிட்ஜ் சாலை­யில், லியாங் சியா ஸ்தி­ரீட்­டுக்கு முன்­ன­தாக, பூகிஸ் கியூப் அருகேயுள்ள நிறுத்தத்தில் கீழே இறங்­கு­வ­தற்­காக நின்று அவர் கத­வின் அருகே காத்­தி­ருந்­தார்.

பேருந்து சென்ற வழித்­த­டத்­தில் ஒரு கார் குறுக்கே புகுந்­த­போது, பேருந்து ஓட்­டு­நர் பிரேக்கை அழுத்­தி­னார். திரு சியா தடு­மாறி விழுந்­தார். ஓட்­டு­நர், பேருந்தை உட­னடி­யாக நிறுத்­தி­ய­தும் சிங்­கப்­பூர் குடிமைத் தற்­காப்­புப் படை அழைக்­கப்­பட்­டது.

போலி­சார் ஒரு 43 வயது நபரை கவ­ன­மின்றி கார் ஓட்­டி­ய­தற்­கா­க­வும் கடு­மை­யான காயங்­கள் ஏற் ­ப­டுத்­தி­ய­தற்­கா­க­வும் கைது செய்து ­உள்­ள­னர்.

திரு சியாவின் மகளான திருவாட்டி சியா ஹுவான் லிங், 30, கடந்த ஒரு வாரமாக தமது குடும்பம் பெரும் துயத்தில் உள்ள தாகக் கூறினார்.

சம்பவத்தைப் பார்த்தவர்களை முன்வரும்படி அவர் கடந்த வாரம் சமூக ஊடகங்களில் கேட்டுக் கொண்டிருந்தார். பலரும் முன்வந்த போதும் சம்பவத்துக்குப் பிந்தைய வற்றைத்தான் அவர்கள் கண்டதாக திருவாட்டி சியா கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!