ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் புதிதாகத் தொடங்கியுள்ள மூன்று நாட்டுப் பங்காளித்துவம் பற்றி ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் பிரதமர் லீ சியன் லூங்கிடம் விவரம் அளித் துள்ளார். வெளியுறவு அமைச்சு நேற்று இதைத் தெரிவித்தது. ஆக்கஸ் என்று பெயரிடப்பட்ட அப்பங்காளித்துவம் பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், திரு மோரிசன் ஆகிய மூவரும் நேற்று அறிவித்திருந்தனர்.
ஆஸ்திரேலியா அதன் நீர்மூழ்கிக் கப்பல்களில் அணுவாற்றல் பெற்றதாக மாற்றவும் அமெரிக்காவிடமிருந்து நீண்டதொலைவு பாயக்கூடிய எறிபடைகளை அமெரிக்காவிடமிருந்து வாங்கவும் அந்த பங்காளித்துவம் வகை செய்யும்.
ஆஸ்திரேலியப் பிரதமர் இதுபற்றி அழைத்து விவரித்தபோது, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவற்றுடன் சிங்கப்பூர் கொண்டிருக்கும் நீண்டகால உறவு களைப் பிரதமர் சுட்டியதாக வெளியுறவு அமைச்சு கூறியது.
அப்பங்காளித்துவம் இந்த வட்டாரத்தின் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் ஆக்ககரமாகப் பங்காற்றும் என்றும் வட்டாரக் கட்டமைப்புடன் ஒத்துழைக்கும் என்று திரு லீ நம்பிக்கை தெரிவித்தார்.

