மின்சாரக் கட்டணங்கள் தொடர்ந்து உயரக்கூடும்

கடந்த சில மாதங்­க­ளாக வீடு­களுக்­கான மின்­சா­ரக் கட்­ட­ணங்­கள் அதி­க­ரித்­து ­வந்­துள்­ளன. இன்­னும் சில காலத்­திற்­குக் கட்­ட­ணங்­கள் தொடர்ந்து அதி­க­ரிக்­கும் என்­றும் எதிர்­பார்க்­கப்­படுகிறது.

அதி­க­ரித்­து­வ­ரும் எரி­சக்தி விலை, மொத்த விற்­ப­னைச் சந்தை சூடு­பி­டிப்­பது போன்ற கார­ணங்­க­ளால் மின்­சா­ரச் சேவை­களை வழங்­கும் சில்­லறை வர்த்தகர்­கள் கட்­ட­ணத்தை உயர்த்து­வ­தாக இத்­து­றை­யைச் சேர்ந்த நிறு­வ­னங்­களும் கவ­னிப்­பா­ளர்­களும் கூறு­கின்­ற­னர்.

நிர்­ண­யிக்­கப்­பட்ட விலைக்கு மாதந்­தோ­றும் வழங்­கப்­படும் மின்­சா­ரச் சேவைத் திட்­டங்­க­ளுக்கு இது பொருந்­தும்.

பல பய­னீட்­டா­ளர்­கள் கூடு­தல் கட்­ட­ணம் செலுத்­தத் தேவை ஏற்­ப­டாத வகை­யில் இத்­திட்­டங்­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால், திட்­டங்­கள் நிறை­வுக்கு வந்த பிறகு கட்­ட­ணம் அதி­க­ரிக்­கக்­கூ­டும்.இயற்கை எரி­வா­யு­வின் விலை அதி­க­ரித்­து­வ­ரு­வ­தால் மின்­சா­ரம் உற்­பத்தி செய்­வ­தற்­கான விலை கூடி­யுள்­ள­தாக சில நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

சிங்­கப்­பூர் அதன் எரி­சக்தி தேவை­களில் 95 விழுக்­காட்­டிற்கு இயற்கை எரி­வா­யு­வைச் சார்ந்­திருக்­கிறது.

மலே­சியா, இந்­தோ­னீ­சியா ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூர் இயற்கை எரி­வா­யு­வைப் பெறு­கிறது, திரவ இயற்கை எரி­வா­யுவையும் இறக்கு­மதி செய்­கிறது.

கடந்த ஜூலை மாதம் இருந்­த­து­டன் ஒப்­பி­டு­கை­யில் மின்­சார சில்­லறை வர்த்­த­கர்­கள் இம்­மா­தம் நிர்­ண­யிக்­கப்­பட்ட மின்­சா­ரச் சேவைத் திட்­டங்­க­ளின் விலையை 10லிருந்து 20 விழுக்­காடு உயர்த்தி­உள்­ள­னர்.

ஏற்­கெ­னவே இத்­திட்­டங்­களுக்கு விண்­ணப்­பித்­த பெரும்­பா­லோர் விலை உயர்­வால் இது­வரை பாதிக்­கப்­ப­ட­வில்லை. ஆனால் ஒப்­பந்­தம் நிறை­வ­டையும்­போது மீண்­டும் விண்­ணப்­பிக்­க­வேண்­டும். அப்­போது விலை அதி­க­ரிக்­க­லாம் என்­பதைப் பய­னீட்­டா­ளர்­கள் அறி­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!