தேசிய சேவை ஆற்றவுள்ள நீச்சல் வீரர்கள் ஸ்கூலிங், குவா

தேசிய சேவை ஆற்றவுள்ள நீச்சல் வீரர்கள் ஸ்கூலிங், குவா

2 mins read
5c905445-1a45-4107-801b-df13f3c2c4c3
நீச்சல் வீரர்கள் ஜோசஃப் ஸ்கூலிங் (இடது), குவா செங் வென். கோப்புப்படம்/ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரின் நீச்­சல் வீரர்­கள் ஜோசஃப் ஸ்கூ­லிங், குவா செங் வென் இரு­வ­ரும் தேசிய சேவை கடமையை ஆற்­று­வது இனி ஒத்தி­வைக்­கப்­ப­டாது எனத் தற்­காப்பு அமைச்சு அறிக்கை ஒன்­றில் தெரிவித்­துள்­ளது. ஸ்கூலிங்கிற்கு 26 வயதாகிறது. குவாவின் வயது 24. சென்ற மாதம் 31ஆம் தேதி வரை இவர்­கள் தேசிய சேவை ஆற்­று­வது ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. இனி அந்த அனு­மதி நீட்­டிக்­கப்­படாது.

ஒத்­தி­வைக்க விண்­ணப்­பித்­த­போது ஸ்கூ­லிங்­கும் குவா­வும் தேசிய சேவை ஆற்ற ஒப்­புக்­கொண்­ட­னர். அதற்கு ஏற்­ற­வாறு இரு­வ­ரும் தேசிய சேவைக்­குச் செல்­வர் என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

தேசிய சேவைக்கு விண்ணப்பிப்­பதற்கு முன்­னால் சில செயல்­முறை­களை மேற்­கொள்­ள­வேண்­டும். அதற்­குப் பிறகு இரு­வ­ரும் தேசிய சேவை ஆற்ற விண்­ணப்­பிப்­பர் என்று அமைச்சு சொன்­னது.

இதன் தொடர்­பில் அர­சாங்­கம் அளித்த வலு­வான ஆத­ர­வுக்கு ஸ்கூ­லிங் தனது நன்­றி­யைத் தெரிவித்­துக்­கொண்­டார். தேசிய சேவை ஆற்­று­வதை ஒத்­தி­வைக்­கா­மல் இருந்திருந்தால் தான் சாதனைகளைப் புரிந்­திருக்­க­மு­டி­யாது என்று அவர் சொன்­னார். 2016 ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களில் ஆண்­கள் 100 மீட்­டர் வண்ணத்­துப்­பூச்சி பாணி நீச்­சல் போட்­டி­யில் ஸ்கூ­லிங் தங்­கப் பதக்கம் வென்­றார். அதுவே ஒலிம்­பிக் வர­லாற்­றில் சிங்­கப்­பூர் வென்ற முதல் தங்­கப் பதக்­கம்.

உயர்­தர போட்­டி­களில் பங்­கேற்­கத் தான் மிகுந்த ஊக்­கத்­து­டன் இருப்­ப­தா­க­வும் நீச்­ச­லில் தான் இன்­னும் அதி­க­மாக சாதிக்­க­வும் பங்­காற்­ற­வும் வேண்­டும் என்றும் குவா கூறி­னார். தேசிய சேவை ஆற்­று­வதை ஒத்தி­வைப்­ப­தற்­கான விண்­ணப்பத்தை ஏற்­றுக்­கொள்­ள­லாமா என்­பது கலா­சார, சமு­தாய, இளையர் துறை அமைச்­சின் ஆலோ­ச­னை­யு­டன் முடி­வெ­டுக்­கப்­படும். இதன் தொடர்­பில் உள்ள வலு­வான விதி­மு­றை­க­ளைக் கருத்தில்­கொண்டே முடி­வெ­டுக்­கப்­படும்.