போலிஸ் அதிகாரிக்கு கையூட்டு கொடுக்க முயன்றதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

போலிஸ் அதிகாரிக்கு கையூட்டு கொடுக்க முயன்றதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
aa241650-5eba-445e-99a3-3380459ff558
-

போலிஸ் அதி­கா­ரிக்கு கையூட்டு கொடுக்க முயன்­ற­தாக ஆட­வர் ஒரு­வர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. சீனா­வைச் சேர்ந்த 29 வயது சூ ஷுவோ­பெய், ஓங் ஷு ஹொங் என்ற போலிஸ் அதி­கா­ரிக்கு இரண்டு முறை கையூட்டு கொடுக்க முயன்­ற­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

சம்­ப­வங்­கள் கடந்த ஜூலை மாதம் நான்­காம் தேதி­யன்று நிகழ்ந்­த­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

வழங்­கப்­பட்ட கையூட்­டுத் தொகையை திரு ஓங் பெற மறுத்­த­தாக லஞ்ச ஊழல் புல­னாய்­வுப் பிரிவு அறிக்கை ஒன்­றில் குறிப்­பிட்­டது. சம்­ப­வங்­க­ளுக்­குப் பிறகு இந்த விவ­கா­ரம் பிரி­வி­டம் ஒப்­படைக்­கப்­பட்­டது. தனது அடை­யாள விவ­ரங்­க­ளைத் தெரிந்­து­கொள்­வ­தற்­கான சோத­னையை போலிஸ் அதி­காரி மேற்­கொள்­ளா­மல் இருக்க சூ கையூட்டு வழங்­கி­ய­தாக நீதி­மன்ற ஆவ­ணங்­கள் கூறின.

போலிஸ் காவ­லி­லி­ருந்து தன்னை விடு­விப்­ப­தற்­காக சூ அதி­கா­ரிக்கு 76 வெள்­ளி­யைக் கையூட்­டாக வழங்­கி­ய­தா­க­வும் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

சூவின் அடை­யாள விவ­ரங்­களைத் தெரிந்­து­கொள்ள அதி­காரி­கள் சோதனை நடத்­தி­ய­தற்­கான கார­ணம் நீதி­மன்ற ஆவ­ணங்­களில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. அவர் மீது இரண்டு ஊழல் குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.