$14மி. ரொக்கம் கையாடல்; இயக்குநர்களின் கூட்டுச் சதி

$14மி. ரொக்கம் கையாடல்; இயக்குநர்களின் கூட்டுச் சதி

2 mins read
8aa1147c-af04-4124-8ec5-05808f07e3c6
-

$14 மில்­லி­யன் ரொக்­கப் பணத்­தைக் கையாட கூட்­டுச் சதி­யில் ஈடு­பட்­டுள்­ள­தாக இரு வெவ்­வேறு நிறு­வ­னங்­க­ளைச் சேர்ந்த இரண்டு இயக்­கு­நர்­கள் நேற்று நீதி­மன்­றத்­தில் நிறுத்­தப்­பட்­ட­னர்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளான 54 வயது லீ பூன் டெக், 56 வயது சான் இயூ டெயிக் மீதுக் குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது.

சான் மீது இரண்டு நம்­பிக்கை மோசடிக் குற்­றச்சாட்டுகளும்; லீ மீது மூன்று நம்­பிக்கை மோசடி குற்­றச்­சாட்­டு­கள் உட்­பட 12 குற்­றங்­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

இவற்­றுள் இரண்டு சானு­டன் இணைந்து அவர் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­படும் குற்­றங்­கள்.

லீ சுய­மாக $2.2 மில்­லி­யன் கையாண்­ட­தா­க­வும் குற்­றச்­சாட்டு உள்­ளது. மேலும், லீ $16.2 மில்­லி­யனை வேறு 'ஸ்ட்­ரெய்ட்ஸ்­வோர்ல்ட் அட்­வை­சரி' மூலம் கையைண்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

'ஸ்ட்­ரெய்ட்ஸ்­வோர்ல்ட் அட்­வை­சரி' பிரிட்­டிஷ் வெர்­ஜின் ஐலெண்ட்ஸ்'இல் உள்ள நிறு­வனம் என்­றும் சான்­தான் அதன் இயக்கு­நர் என்­றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. தற்­போது சான் ஃபோர் செந்­தோசா இன்­டர்­நே­ஷ­னல், ஹேப்­பி­லேண்ட் வோர்ல்ட், சொவ்­ரன் ஒயிட் (சிங்­கப்­பூர்) இன்­டர்­நே­ஷ­னல் லாஜிஸ்ட்­டிக்ஸ் ஆகிய மூன்று நிறு­வ­னங்­க­ளின் இயக்­கு­ந­ராக இருக்­கி­றார்.

இவை நீதி­மன்­ற­ ஆ­வ­ணங்­களில் இடம்­வில்லை.

லீ தற்­போது 'ஹெச்பி குளோபல்' நிறு­வ­னத்­தின் இயக்­கு­ந­ராக பணிபுரி­கி­றார். அவர் மீது மேலும் ஒன்­பது குற்­றச்­சாட்­டு­கள் உள்­ளன. இவற்­றுள் போலிக் கணக்­கு­களைத் தயா­ரித்த­தும் போலி ஆவ­ணங்­க­ளைப் பயன்­படுத்­தி­ய­தும் அடங்­கும்.

ஜூன் 2014ல் பணத்­தைக் கையாட கூட்டுச் சதி­யில் ஈடு­பட்­ட­தாக மீண்­டும் சான் மீதும் லீ மீதும் குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது. அதில், $7 மில்­லி­யனை 'கேஎல்­ட­பிள்யு' ஹோல்­டிங்ஸ்'சின் வங்கி கணக்­கி­லி­ருந்து 'ஸ்ட்­ரெய்ட்ஸ்­வோர்ல்ட் அட்­வை­சரி'க்குக் கட்­ட­ண­மாக செலுத்­தி­ய­தாக கூறப்­ப­டு­கிறது.