உள்ளூர் தாவர வகைகளை ஆராய புதிய ஆய்வுக் கழகம்

தாவ­ரங்­கள், இயற்கை கட்­ட­மைப்­பின் மூலம் உயி­ரி­யல், சுகா­தா­ரம், மருந்­தி­யல் ஆகிய துறை­க­ளின் ஆய்வு மேம்­பாட்­டுக்­கான புதிய ஆய்வுக் கழ­கத்தை     ட் நேற்று தொடங்­கி­வைத்­தார்.

‘சிங்­ஹெல்த் டியூக்-என்­யு­எஸ் இன்ஸ்­டி­டி­யூட் ஆப் பயோ­டை­வர்­சிட்டி’, உள்­ளூர், வட்­டார தாவர வகை­கள் மீது ஆய்வு மேற்­கொள்­ளும்.

இந்த மூலிகை பல்­லு­யிரி (பயோ­டை­வர்­சிட்டி), மருத்­துவத் திட்­டத்­தில் புதிய தொழி­நுட்­பம் வாயி­லா­கத் தாவ­ரங்­களை ஆய்வு செய்து, அவற்­றி­லி­ருந்து சாறு­ எடுக்­கப்­படும். அவற்­றைக் கொண்டு நீரி­ழிவு நோய், உயர் ரத்த அழுத்­தம் போன்ற நோய்­க­ளைக் குணப்­ப­டுத்த ஆய்­வு­கள் மேற்­கொள்­ளப்­படும்.

உணவு பல்­லு­யிரி, ஊட்­டச்­சத்­துச் திட்­டத்­தின் கீழ், உணவே மருந்து என்ற கண்­ணோட்­டத்­தி­லி­ருந்­தும் வழக்­க­மான சிகிச்­சை­யோடு, உண­வை­யும் பயன்­படுத்தி எவ்­வாறு நோய்­க­ளைச் சமா­ளிக்­க­லாம் என்றும் ஆரா­யும்.

‘அர்­பன் பயோ­டை­வர்­சிட்டி அண்ட் வெல்­னஸ்’ திட்­டம் சுற்­றுச்­சூ­ழல் மீது பல்­லு­யிர் ஏற்­ப­டுத்­தும் தாக்கங்­களை­யும். தாவ­ரங்­க­ளின் வடிவம், வண்­ணம், வாசனை ஒரு­வ­ரது சுகா­தா­ரத்­தில் ஏற்­ப­டுத்­தும் தாக்­கத்­தை­யும் ஆரா­யும். உதா­ர­ணத்­துக்கு ‘இசென்­ஷல் ஆயில்ஸ்’ ஒரு­வ­ரது பதற்­ற­நி­லை­யை­யும் தூக்­கம் இன்மை­யை­யும் போக்­கு­வ­தில் எப்­படி உத­வும் என்­பது குறித்து இத்­திட்­டத்­தின் கீழ் ஆரா­யப்­படும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!