வாழ்க்கை வழிகாட்டிகளாக வழிநடத்திய ஆசிரியப் பெருமக்கள்

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

 

தர­மான ஆசி­ரி­யர்­களை உரு­வாக்க, அவர்­க­ளுக்கு உயர்­தர ஆசி­ரி­யர் பயிற்­சியை வழங்க வேண்­டும் என்­ப­தில் குறி­யாக இருப்பவர் முனைவர் ஆ.ரா.சிவ­கு­மா­ரன்.

இதைச் சாத்­தி­யப்­படுத்த தேசிய கல்­விக் கழ­கத்­தில் ஏறக்­கு­றைய 25 ஆண்­டு­கா­லம் பணி­புரிந்த இவர், அங்கு தமிழ்­மொ­ழி­யில் பட்­டக் கல்­வி­யைத் தொடங்க வேண்­டும் என ஒவ்­வோர் ஆண்டும் நிர்­வா­கத்­தி­டம் குரல் எழுப்­பி­னார். 'எறும்பு ஊரக் கல்­லும் தேயும்' என்பதற்கேற்ப பல ஆண்டுக­ளின் விடா­மு­யற்­சி­யின் பல­னாக தேசிய கல்­விக் கழகத்­தில் தமிழ் மொழி பட்­டப்­படிப்புத் திட்­டம் 2016ஆம் ஆண்­டில் நன­வா­னது.

மாண­வர்­க­ளின் மொழி ஆற்றலை உயர்த்த, தேசிய கலை­கள் மன்­றத்­து­டன் இணைந்து பிரபல எழுத்­தா­ளர் ஜெய­மோ­கனை இங்கு இரு மாதங்­கள் மாண­வர்­க­ளுக்கு படைப்­பாற்­றல் நுணுக்­கங்­களைக் கற்­றுத் தர 2016ஆம் ஆண்டில் ஏற்­பாடு செய்­தார். அத்­திட்­டத்­தில் பங்­கெ­டுத்த மாண­வர்­க­ளின் சிறு­கதைப் படைப்­பு­கள் மறு­ஆண்டு ஒரு நூலாக வெளி­யா­னது.

1980களில் கத்­தோ­லிக்க தொடக்­கக் கல்­லூ­ரி­யில் பகுதி நேர ஆசி­ரி­ய­ரா­கப் பணியைத் தொடங்­கிய இவர், வெவ்­வேறு உயர் கல்வி நிலை­யங்­களில் கற்­பித்துள்ளார்.

பின்னர் தேசிய கல்­விக் கழ­கத்­தில் இணைந்­து, அதன் தமிழ்த்­துறை தலை­வ­ராக 2019ஆம் ஆண்­டில் பணி ஓய்வு பெற்­றார்.

தொடக்­க­நிலை, உயர்­நி­லை வகுப்புகளுக்கான தமிழ்ப் பாட நூல் தயா­ரிப்­புக் குழு­வில் ஆலோ­ச­கரா­க­வும் உள்ள இவர், 20 நூல்­களை வெளி­யிட்­டுள்­ளார். இந்­தியா, மலேசியா, கனடா, உள்ளிட்ட பல்வேறு நாடு­களில் நடந்த அனைத்­து­லக மாநா­டு­க­ளி­லும் ஆய்­வுக் கட்­டு­ரை­க­ளைப் படைத்­துள்­ளார்.

"எவ்­வ­ளவு கற்­றுக்­கொ­டுக்­கிறோம் என்­பதைவிட, எத்தனை மாண­வர்­கள் கற்­றுக்­கொண்­டார்­கள் என்­பதே முக்­கி­யம். பல ஆண்­டு­கள் கழித்து சந்­திக்­கும் மாண­வர்­கள், நான் கற்­பித்த இலக்­கிய பாடங்­கள் மன­தில் பதிந்­துள்­ளன எனக் கூறும்போது, பணி­யைச் சரி­யாகச் செய்­துள்­ளேன் என்ற திருப்தி கிடைக்­கின்­றது," என்றார் தேசிய கல்­விக் கழ­கத்­தின் உன்­னத ஆசிரியர் விருதை ஆறு முறை பெற்­றி­ருக்­கும் 67 வயது முனை­வர் சிவ­கு­மா­ரன்.

தற்போது பகுதி நேர­மா­கக் கற்பித்­த­லில் ஈடு­பட்டு வரும் இவர், இவ்­வாண்­டின் நல்­லா­சி­ரி­யர் விருது நிகழ்ச்­சி­யில் வாழ்­நாள் சாத­னை­யா­ளர் விருது பெற்ற ஆசி­ரி­யர்­களில் ஒரு­வர்.

பணி­யில் சிறந்­தோங்­கும் தமிழ் ஆசி­ரி­யர்­களை கெள­ர­விக்­கும் விதத்­தில் தமிழ் முரசு 2002ஆம் ஆண்­டி­லி­ருந்து இதர பங்­கா­ளி­களு­டன் இணைந்து இவ்­வி­ரு­து­களை வழங்கி வரு­கிறது.

 

நல்லாசிரியர் விருது வென்றவருக்கு வாழ்நாள் சாதனை விருது

கடந்த 2002ஆம் ஆண்­டில் உயர்­நி­லைப் பள்­ளிப் பிரி­வில் நல்­லா­சி­யர் விருது பெற்ற ஆசி­ரி­யர் திரு கு.சந்­தி­ர­மூர்த்­தி, இம்­முறை வாழ்­நாள் சாதனை விருதுபெறும் மற்­றொரு மூத்த ஆசி­ரி­யர்.

செயிண்ட் ஜார்­ஜஸ் தமிழ்ப் பள்ளி­யில் 1964ல் ஆசிரி­யர் பணியைத் தொடங்­கிய திரு ­சந்தி­ர­மூர்த்தி, பிறகு மெக்­பர்­சன் தமிழ்­மொழி நிலை­யத்­தில் கற்பித்­தார். 1980களில் கல்வி அமைச்­சின் பாடத்­திட்ட மேம்­பாட்­டுப் பிரி­வில் சேர்ந்து உயர்­நிலை வகுப்­புக­ளுக்­கான பாட நூல், பயிற்சி நூல், பயிற்­றுக் கரு­வி­கள் தயா­ரிப்பில் ஈடு­பட்­டார்.

மேலும், ஈஸ்ட் வியூ உயர்­நி­லைப் பள்­ளி­யில் காற்­பந்­துப் பயிற்­று­விப்­பா­ள­ரா­க­, பள்­ளி­க­ளுக்­கான தேசிய அளவு காற்­பந்­துப் போட்­டி­க­ளுக்கு முன்­னே­றச் செய்­தார்.

சிங்­கப்­பூர் தமி­ழா­சி­ரி­யர் சங்­கத்­தில் துணைப் பொரு­ளா­ள­ராக 1992ல் பொறுப்­பேற்று, சங்­கம் மறு ஆண்­டி­லி­ருந்து நடத்­திய தொடக்­க­நிலை, உயர்­நிலை மாண­வர்­க­ளுக்­கான தமிழ் மொழி துணைப்­பாட வகுப்­பு­க­ளின் மேற்­பார்­வை­யா­ள­ரா­கப் பங்­க­ளித்­தார்.

ராஃபிள்ஸ் பெண்­கள் பள்ளி தமி­ழா­சி­ரி­ய­ராக 2009ல் பணி­ ஓய்வு­பெற்­ற திரு சந்­தி­ர­மூர்த்தி, அப்பள்­ளி­யில், 'மெக்ரோ திங்­கிங் கான்­செப்ட்' என்ற சிந்­த­னைத் திறன் உத்தி முறை மூலம் மாண­வர்­களை தமிழ் நாவல்­க­ளைப் படிக்கச் செய்­த­தில் பெரு­மி­தம் கொள்­கி­றார்.

சிங்­கப்­பூர் தமி­ழா­சி­ரி­யர் சங்­கம் ரேஸ் கோர்ஸ் சாலை­யில் சொந்­தக் கட்­ட­டம் வாங்கி, 2010ல் அங்கு செயல்­ப­டத் தொடங்­கி­யபோது சங்கத்­தின் கட்­ட­டக் குழுவின் தலை­வ­ரா­கப் பொறுப்பு வகித்து அப்­ப­ணியை செவ்­வனே நிறை­வேற்­றி­யது திரு சந்­தி­ர­மூர்த்­தி­யின் முக்­கிய பங்­க­ளிப்­பு­களில் ஒன்­றா­கும்.

"40 ஆண்­டு­க­ளுக்­கும் மேலான ஆசி­ரி­யர் பணி­யில், எனது பல்வேறு பங்­க­ளிப்­பு­களை அங்­கீ­க­ரித்து விருது வழங்­கிய நிகழ்ச்­சி­யின் ஏற்பாட்­டுக் குழு­வி­ன­ருக்கு இத்­த­ரு­ணத்­தில் நன்றிகூறக் கட­மைப்­பட்­டி­ருக்­கிறேன்," என்று தெரி­வித்­தார் 76 வயது திரு சந்­தி­ர­மூர்த்தி.

 

வாழ்நாள் கற்றலும், வாழ்க்கை வழிகாட்டலும் இவர் இலக்கு

'ஆசி­ரி­யர் பணி­யில் சிறந்த முன்­மா­தி­ரி­யா­கத் திகழ்ந்­திட விழை­தல்' நல்­லா­சி­ரி­யர் வாழ்­நாள் சாத­னை­யா­ளர் விருது பெற்ற முனை­வர் தமி­ழ­ரசி சுப்­பி­ர­ம­ணி­ய­னித்­தின் தாராக மந்­தி­ர­மா­கும்.

1980களில் ஆங்­கிலோ சீன தொடக்­கப்­பள்­ளி­யில் ஆசி­ரி­யர் பணி­யைத் தொடங்­கிய அவர் அங்கு 10 ஆண்­டு­கள் சேவை­யாற்றி­னார். பின் 1990களில் மாண­வர்­களுக்கு 'நற்­கு­டி­மக்­கள்' பாட­நூல் குழு­வில் சிறப்பு எழுத்­தா­ள­ராக முனை­வர் தமி­ழ­ரசி இடம்­பெற்றார்.

1998ஆம் ஆண்டு முதல் ஜின்­‌‌‌ஷான், கிராஞ்சி ஆகிய தொடக்­கப் ­பள்­ளி­களில் பணி­யாற்­றி­விட்டு, மதுரை காம­ரா­சர் பல்­க­லைக்­க­ழகத்­தில் முழு நேர­மாக இளங்­கலை பட்­டப்­ப­டிப்பை மேற்­கொண்டார்.

கடந்த 2009ல் தமி­ழா­சி­ரி­யர் பணித்­தி­றன் மேம்­பாட்­ட­கத்­தில் முதன்மை ஆசி­ரி­ய­ராக, பணி தொடங்­க­வுள்ள புதிய ஆசி­ரி­யர்­களுக்குப் பயிற்சி கொடுப்­பது, மூத்த ஆசி­ரி­யர்­க­ளின் ஆய்வு முயற்­சி­களுக்கு ஆத­ரவு வழங்கி அடுத்த நிலை­க­ளுக்கு முன்­னேற வழி­காட்டு­வது போன்­ற­வற்­றில் ஈடு­பட்­டார்.

வாழ்­நாள் கற்­ற­லுக்கு முன்­னு­தா­ர­ண­மாக, சென்னை பல்­க­லைக்­க­ழ­கத்­தில் 58 வய­தில் முனை­வர் பட்­டம் பெற்­றார். கடந்­தாண்டு முதன்மை ஆசி­ரி­யர் பணி­யி­லி­ருந்து ஓய்­வு­பெற்ற பிறகு, தேசி­யக் கல்­விக் கழ­கத்­தில் விரி­வு­ரை­யா­ள­ராக பணியாற்றி வரு­கி­றார் இவர்.

"முன்­னாள் மாண­வர்­கள் என்னுடன் தொடர்புகொண்டு திரு­மணம் போன்ற நிகழ்வு­க­ளுக்கு அழைப்­பி­தழ் விடுப்­பது மனதை நெகி­ழச் செய்­கிறது. தமிழ்­மொழியை வாழும்மொழி­யா­கப் பயன்­ப­டுத்­து­வது மகிழ்ச்சியளிக்கிறது," என்றார் 63 வயது முனை­வர் தமி­ழ­ரசி.

21ஆம் நூற்­றாண்டு மாண­வர்­களைக் கையாள, பன்­முகத் திறன்­களைக் கொண்ட ஆசி­ரி­யர்­களா­கத் திகழ வேண்­டும் என்று வலி­யு­றுத்­திய முனை­வர் தமி­ழ­ரசி, அத்திறன்­களைப் பெறுவதில் எதிர்­கால ஆசி­ரி­யர்­கள் முனைப்புக் காட்ட வேண்­டும் என்று அவர் அறி­வு­றுத்தினார்.

நல்லாசிரியர் விருது 2020/2021 வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் பெருமைக்குரியோர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!