சிங்கப்பூர் உலகப் பொருளியலை, உலக வர்த்த கத்தையே பெரிதும் சார்ந்து இருக்கும் நாடு. இயற்கை வளம் இல்லாத, நிலப் பரப்பில் மிகவும் சிறிய சிங்கப்பூர் போன்ற நாடுகள் உலகத்துடன், உலகப் பொருளியலுடன் இணைந்துகொண்டு உலக ஆற்றல்களுக்குத் தன் கதவுகளைத் திறந்து வைத்திருக்க வேண்டியது உயிர்நாடினது.
இதைக் கவனத்தில்கொண்டுதான் உலகின் பல நாடுகளோடும் வட்டாரங்களோடும் சிங்கப்பூர் தாராள வர்த்தக உடன்பாடுகளைச் செய்துகொண்டு இருக்கிறது. அத்தகைய உடன்பாடுகள் மூலம் வர்த்தகம் பெருகுவதோடு முதலீடுகளும் சிங்கப்பூருக்கு வருகின்றன. அவற்றின் காரணமாக உள்ளூர் மக்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் உருவாகின்றன.
வர்த்தக உடன்பாடுகள் காரணமாக சரக்குகளும் சேவைகளும் கிடைப்பதற்கும் அறிவும் ஆற்றலும் அனுபவமும் பகிர்ந்துகொள்ளப்படுவதற்கும் வழி ஏற்படுகிறது.
உலகளவில் பல நாடுகளோடும் பல வட்டாரங்களோடும் தாராள வர்த்தக உடன்பாடுகள் ஏற்படுவதற்கு சிங்கப்பூர் அரும்பாடுபட்டு வருகிறது.
இத்தகைய உடன்பாடுகளில் இந்திவுடன் சிங்கப்பூர் செய்துகொண்ட பரந்த பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடும் ஒன்று.
சிங்கப்பூருக்கு இந்தியர்கள் வேலைக்கு வந்து இறுதியில் இங்கேயே குடியுரிமை பெறுவதற்கு வழி கோலும் ஏற்பாடுகள் இந்த உடன்பாட்டில் இருக்கின்றன என்ற ஒரு தவறான கருத்து கொஞ்ச காலமாக சில சிங்கப்பூரர்களிடம் நிலவி வருகிறது.
சிங்கப்பூரர்களிடம் வேலை தொடர்பில் கவலை நிலவுகிறது. அந்தக் கவலைக்கு சிங்கப்பூர் கடைப்பிடித்து வரும் ஆற்றல்மிகு வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பான கொள்கைதான் முக்கிய காரணம் என்று சில நாட்களுக்கு முன் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி நாடாளுமன்றத்தில் கருத்தை முன்வைத்தது.
இந்திவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையேன பரந்த பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடு போன்ற சில தாராள வர்த்தக உடன்பாடுகள் காரணமாக, வேலைகளைப் பெறுவதில் சிங்கப்பூரர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் கடுமைன போட்டி ஏற்பட்டுவிட்டது என்று அந்தக் கட்சியின் தொகுதி இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.
உள்ளூர் நிபுணர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள், தொழில்நுட்பர்களுக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகவும் அவர்கள் பார்த்து வந்த வேலை கைநழுவிப் போய்விட்டதாகவும் இதற்கு அத்தகைய உடன்பாடுகளும் காரணம் என்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதுபற்றி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நீண்டநெடும் விவாதம் காரணமாக மக்களுக்கு அச்சம் நீங்கி பெரும் நிம்மதி ஏற்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.
பொதுவாகவே பொருளியல் நிச்சயமில்லாத நிலையில், மக்களுக்கு, குறிப்பாக வேலை தொடர்பில் கவலை நிலவுவது இயற்கைதான்.
இருந்தாலும் உண்மைன நிலவரங்களைச் சீர்தூக்கி பார்க்கும்போது இதற்கு என்ன காரணம் என்பதை நன்கு புரிந்துகொள்ளலாம்.
ஒருவருக்கு வேலை கைநழுவிப் போவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பொருளியல் வேகம் குறைவது, தானியக்கமயம், மின்னிலக்கமயம், வேலைகளின் பாணிகளில் மாற்றம் முதலான பலவும் அதற்குக் காரணமாக இருக்கமுடியும்.
குறிப்பாக கொவிட்-19 தொற்று காலத்தில் பொருளியல் நிச்சயமில்லாத நிலையில் வேலை தொடர்பான அச்சம் அதிகரிக்கும் என்பதில் ஐயமே இல்லை. இத்தகைய நிலவரங்கள் எல்லாம் சிங்கப்பூரில் மட்டுமின்றி உலகெங்கும் காணப்படுகின்றன.
இவற்றுக்கும் ஊழியர் அணியில் உள்ள வெளிநாட்டினருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. வெளிநாட்டு ஊழியர்கள் இல்லை என்றாலும்கூட உள்ளூர் மக்களுக்கு வேலைகள் கைநழுவிப் போகக்கூடிய சூழ்நிலை ஏற்படக்கூடும்.
வெளிநாட்டினரைக் குறைத்தால் மட்டும் உள்ளூர்காரர்களுக்குத் தானாகவே வேலை கிடைத்துவிடும் என்றும் உறுதிகக்கூற முடிது.
ஆற்றல்மிக்க வெளிநாட்டினருக்கு சிங்கப்பூர் அளவுக்கு அதிகமாக கதவைச் சாத்தினால் இங்கு ஒட்டுமொத்த ஆற்றல்வளம் குறைந்துதான் போகும். பொருளியல் வளர்ச்சி பாதிக்கப்படும். முதலீடுகளை விரிவுபடுத்தவும் புதிய முதலீடுகளைச் செய்யவும் நிறுவனங்களுக்கு ஆர்வம் குறைந்துவிடும். கடைசியில் சிங்கப்பூரர்களுக்கு வாய்ப்புகள் மங்கிவிடும்.
அதேவேளையில், சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் வருகையை ஒழுங்குபடுத்தி, திறம்பட நிர்வகிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.
குறைந்தபட்ச சம்பளம், ஊழியர் தீர்வை, ஒதுக்கீட்டு அளவு போன்றவற்றை சிங்கப்பூர் இதற்கு பயன்படுத்துகிறது. இதை முதலாளிகள், தொழிற்சங்கங்களுடன் கலந்து ஆலோசித்துதான் அரசாங்கம் செய்கிறது. சூழ்நிலைக்கேற்ப காலக்கிரம முறைப்படி இந்தக் கொள்கைகளை அரசாங்கம் மறுபரிசீலனை செய்தும் வருகிறது.
இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, உள்ளூர் ஊழியர்கள் தங்களுடைய தேர்ச்சிகளைத் தொடர்ந்து மேம்படுத்திவர வேண்டும் என்பதும் புதுப்புது தேர்ச்சிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் மிகமிக முக்கியமானதாகும்.
இப்படி அவர்கள் செயல்பட்டால்தான் காலத்திற்கு ஏற்ப கிடைக்கும் வேலைகளுக்குப் பொருத்தமான நிலையில் அவர்கள் இருந்து வரமுடியும். வெளிநாட்டு ஊழியர்களால் போட்டி எப்படி இருந்தாலும் அதைச் சமாளித்து முன்னணியில் திகழ முடியும்.
ஆகைல் பின்புறமாக வந்து குடியுரிமை பெறுவதற்குத் தாராள வர்த்தக உடன்பாடுகள் வழிவகுக்கின்றன; ஒரு குறிப்பிட்ட நாட்டினருக்குச் சாதகமாக இருக்கின்றன என்றெல்லாம் கூறுவது உண்மை நிலவரங்களைப் புரிந்துகொள்ளாமல் அறிமையில் தெரிவிக்கப்படும் கருத்துகளாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
மற்ற உடன்பாடுகளும் சரி இந்தி-சிங்கப்பூர் உடன்பாடும் சரி எந்தவோர் உடன்பாடும் ருக்கும் இங்கு வந்து வேலை பார்ப்பதற்கான சலுகை முறைகளை ஏற்படுத்தித் தருவதில்லை.
சிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் அனைவருமே நடப்பில் இருக்கும் வேலை நியமனம் மற்றும் குடியுரிமை விதிகளுக்கு உட்பட்டுத்தான் ஆகவேண்டும்.
சிங்கப்பூரின் பொருளியலுக்கான ஒட்டுமொத்த நன்மை, முதலீடுகள், வேலைகளில் இருந்து மட்டும் ஏற்பட்டுவிடாது. நிறுவனங்கள் வெளிநாடுகளில் விரிவடைவதும் இதற்கு முக்கிய காரணம். இதற்கான வழியைத் தாராள வர்த்தக உடன்பாடுகள் ஏற்படுத்தி தருகின்றன என்பதை நினைவில் கொள்ளவேண்டியதும் அவசியம்.
ஆகைல் இத்தகைய உடன்பாடுகளை அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்துவது நேர்மையற்ற செயலாகவே இருக்கும்.

