தொடக்கப்பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்தே படிப்பார்கள் இம்மாதம் 27 முதல் அக்டோபர் 6 வரை சிறப்புக் கல்வி மாணவருக்கும் வீட்டில் வகுப்பு

தொடக்­கப்­பள்­ளி­கள் அனைத்­தும் செப்­டம்­பர் 27 முதல் அக்­டோ­பர் 6ஆம் தேதி வரை மாண­வர்­கள் வீட்­டி­லேயே கல்வி கற்­கும் முறையை நடை­மு­றைப்­ப­டுத்­தும்.

கொவிட்-19 அதி­கரித்து வரு­வதே இதற்­கான கார­ணம் என்று கல்வி அமைச்சு நேற்று தெரி­வித்­தது. தொடக்­கப்­பள்ளி இறு­தித்­தேர்வு அடுத்த மாதம் 6ஆம் தேதி­தான் முடி­வ­டை­கிறது.

தேசிய பாடத்­திட்­டத்­தைப் போதிக்­கும் சிறப்புக் கல்வி பள்­ளிக்­கூ­டங்­க­ளி­லும் இந்த ஏற்­பாடு நடப்­புக்கு வரும் என்­றும் அமைச்சு அறிக்கை ஒன்­றில் குறிப்­பிட்­டது.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள மருத்­துவ ரீதி­யில் இன்­ன­மும் தகுதி பெறா­மல் இருக்­கும் சிறார்­களை மேலும் சிறந்த முறை­யில் பாது­காக்க இந்த ஏற்­பா­டு உத­வும் என்று அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

பள்­ளிக்­கூ­டங்­களில் தொற்று பர­வு­வதைக் கூடு­மா­ன­வரை தடுக்­க­வும் தேர்­வின்­போது தனிமை உத்­த­ர­வின்­கீழ் அல்­லது விடுப்­பின்­கீழ் வைக்­கப்­படும் மாண­வர்­க­ளின் எண்­ணிக்­கையைக் குறைக்­க­வும் இந்த ஏற்­பாடு உத­வும் என்று அமைச்சு தெரி­வித்­தது.

தொடக்­கப்­பள்ளி இறு­தித் தேர்வு­கள் இந்த ஆண்­டு செப்­டம்­பர் 30ல் தொடங்கி அக்­டோ­பர் 6ல் முடி­வடை­கின்­றன.

இத­னி­டையே, "சவால்­மிக்க சூழலில் நம் மாண­வர்­கள் தேசிய தேர்வை எழு­து­கி­றார்­கள். அவர்­களுக்குக் கூடு­மான வரை­ ஆத­ரவு அளித்து அவர்­க­ளைப் பாது­காக்க நாம் அனை­வ­ரும் நம் பங்கை ஆற்று­வோம்," என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் நேற்று ஃபேஸ்புக்­கில் தெரி­வித்­தார்.

வீட்­டி­லேயே மாண­வர்­கள் பாட­வகுப்­பு­களில் கலந்­து­கொள்­ளும் முறை நடப்­பில் இருக்­கும் காலத்­தில் கூடு­தல் ஆத­ரவு தேவைப்­படு­வோர் பள்­ளிக்­கூ­டங்­க­ளுக்­குச் செல்­ல­லாம். வீட்­டி­லி­ருந்து வேலை பார்க்க முடி­யாத அல்­லது மாற்றுப் பராமரிப்பு ஏற்­பா­டு­க­ளைச் செய்­து­கொள்ள இய­லாத பெற்­றோர் பள்ளிக்­கூ­டங்­களை நாட­லாம்.

கல்வி அமைச்­சின் பாலர்­பள்ளி­களும் பாலர்­பள்ளி பரா­ம­ரிப்­புச் சேவை மற்­றும் மாண­வர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­களும் வழக்­க­மா­கச் செயல்­படும். வீட்­டிலேயே படிக்கும் காலத் தில் விரை­வுப் பரி­சோ­தனை செய்து­கொள்­ளும்­படி மாண­வர்­களை அமைச்சு கேட்­டுக்­கொண்டு உள்­ளது.

மாண­வர்­கள், ஊழி­யர்­கள் அனை­வ­ரும் தொடர்ந்து சுகா­தா­ர­மான, துப்­பு­ர­வு­மிக்க பழக்­க­வ­ழக்­கங்­க­ளைக் கடைப்­பி­டித்து வர­வேண்­டும் என்று அமைச்சு வலி­யு­றுத்திக் கூறி­யது.

பாது­காப்பு நிபந்­த­னை­க­ளுக்கு உட்­பட்டு சமூ­கப் பொறுப்­பு­டன் அவர்­கள் நடந்­து­கொள்ள வேண்டும் என்று தெரி­வித்த அமைச்சு, தேவை ஏற்­ப­டும்­போது பள்­ளிக்­கூ­டங்­களைப் பாது­காப்­பாக வைத்­தி­ருக்க கூடு­தல் நட­வ­டிக்­கை­க­ளை­யும் அமைச்சு நடை­மு­றைப்­ப­டுத்­தும் என்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!