செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
0ed7274c-118b-4e70-82ac-6411398cf91c
-

புதிதாக 935 பேருக்கு

கொவிட்-19 கிருமித்தொற்று

சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமையன்று உள்நாட்டில் புதிதாக கொவிட்-19 கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை 934 ஆக இருந்தது. இது, கடந்த ஆண்டு ஏப்ரலுக்குப் பிறகு ஆக அதிக அன்றாட தொற்று அளவாக இருக்கிறது.

சமூகத்தில் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்கள் 838 பேர். கிருமி தொற்றியவர்களில் ஒருவர் வெளி நாட்டில் இருந்து வந்தவர். 96 பேர் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

உள்ளூரில் தொற்றுக்கு ஆளானவர்களில் 241 பேர் 60க்கும் அதிக வயதுள்ளவர்கள். வெள்ளிக்கிழமை மொத்தம் 935 பேர் பாதிக்கப்பட்டனர்.

இதனிடையே, செம்ப்கார்ப் மரின் அட்மிரல்டி யார்ட் என்ற பட்டறையில் புதிய தொற்றுக் குழுமம் தலை காட்டியதாகவும் அதில் 26 பேர் பாதிக்கப்பட்டு உள்ள தாகவும் அமைச்சு குறிப்பிட்டது. பாதிக்கப்பட்டவர்களில் 23 பேர் ஊழியர்கள்.

மருத்துவமனையில் 813 பேர் சிகிச்சைபெற்று வருகிறார்கள். 90 பேர் உயிர்வாயு சிகிச்சை தேவைப்படும் நிலையில் இருந்தனர். 14 பேர் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்களில் 82 பேர் 60க்கும் அதிக வயதுள்ள முதியவர்கள்.

சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமி தொற்றயவர்களின் மொத்த எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நிலவரப்படி 75,783 ஆக இருந்தது.

அமைச்சர் எட்வின் டோங் தனிமையில் இருக்கிறார்

கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் (படம்) இப்போது தனிமையில் இருக்கிறார்.

அவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பதாக தெரியவந்ததே காரணம். அமைச்சர் வெள்ளிக்கிழமை மெய்நிகர் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது அவரே இதைத் தெரிவித்தார்.

தோக்கியோ சென்றுவிட்டு திரும்பிய பிறகு பலமுறை கொவிட்-19 பரிசோதனை களுக்குத் தான் உட்பட்ட தாகவும் தனக்குத் தொற்று இருப்பதாக தன்னைப் பரிசோதித்தவர்கள் சில நாட்களுக்கு முன் கூறியதாகவும் அதையடுத்து தான் தனிமையில் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

உடற்குறை உள்ளவர்களுக்கான பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தோக்கியோவில் அண்மையில் நடந்தன. அவற்றில் கலந்துகொண்ட சிங்கப்பூர் வீரர்களை ஊக்குவிக்க அமைச்சர் அங்கு சென்று இருந்தார்.

யாருக்கு எந்த பூஸ்டர் தடுப்பூசி: வல்லுநர் குழு விரைவில் முடிவு

பூஸ்டர் தடுப்பூசியைப் பொறுத்தவரை, வேறு தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாமா என்பது பற்றி 14 பேரைக்கொண்ட தடுப்பூசி வல்லுநர்கள் குழு விரைவில் முடிவுசெய்யும்.

அந்தக் குழு இது பற்றி ஆராய்ந்து வருவதாகவும் அது தனது பரிந்துரைகளைத் தாக்கல் செய்யும் என்றும் கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு மெய்நிகர் கூட்டத்தில் தெரிவித்தது.

முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வேறு நிறுவன பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாமா என்று கேட்டதற்குப் பதில் அளித்த சிங்கப்பூர் மருத்துவச் சேவைகள் துறை இயக்குநர் கென்னத் மாக், இதுபற்றி யும் வல்லுநர்கள் குழு ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.

அந்த முடிவு கிடைத்ததும் அதற்கு ஏற்ப தடுப்பூசி உத்திகள் சரிசெய்யப்படும் என்றார் அவர்.

சிங்கப்பூரின் பூஸ்டர் தடுப்பூசியைப் பொறுத்தவரை, இப்போதைக்கு ஃபைசர்-பயோஎன்டெக், மொடர்னா ஆகியவற்றை ஒன்று மற்றொன்றுக்கு மாற்றாக கருதலாம் என்று அந்த வல்லுநர்கள் குழு அலோசனை கூறி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.