பல்கலைக்கு $537,500; அடகுக்கடைக்காரர் சங்கம் கொடை

சிங்­கப்­பூர் அட­குக்­க­டைக்­கா­ரர்­கள் சங்­கம் $537,500 திரட்டி அதை சிங்­கப்­பூர் தொழில்­நுட்ப வடி­வமைப்புப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் கல்வி உப­கா­ரச் சம்­ப­ளத் திட்­டத்­திற்கு நன்­கொ­டை­யாக அளித்­து உள்­ளது.

அந்­தச் சங்­கம் தன்­னு­டைய 100வது ஆண்­டு­வி­ழா­வைக் கொண்­டா­டு­கிறது. அதன் ஒரு பகு­தி­யாக உத­வித்­தொகை வழங்­கப்­பட்­டது.

சங்­கத்­தின் 100வது ஆண்­டு­விழா சென்ற ஆண்டு கொண்­டா­டப்­ப­ட­வி­ருந்­தது. ஆனால் கொவிட்-19 கார­ண­மாக அது ஒத்தி­வைக்­கப்­பட்­டது.

புக்­கிட் மேரா­வில் இருக்­கும் கேட்வே தியேட்­ட­ரில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்­சி­யில் அந்­தத் தொகைக்­கான காசோ­லையைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தலை­வர் சோங் தாவ் சோங்­கி­டம் சங்­கத்­தின் தலை­வர் ஹோ கியம் செங் அளித்­தார்.

திரட்­டப்­பட்ட தொகை­யைப் போல் ஒன்­றரை மடங்கு தொகையை அர­சாங்­கம் தரும் என்­றும் திரு ஹொ கூறி­னார்.

சங்­கம் நேற்­றைய நிகழ்ச்சி­யில் புதிய சின்­னத்தை வெளி­யிட்­டது. ‘நூற்­றாண்டு முதல் ஆயி­ர­மாண்டு வரை’ என்ற சிங்­கப்­பூர் அட­குத் தொழில்- சிறப்பு நினைவு புத்­த­கம் ஒன்­றை­யும் அது வெளி­யிட்­டது.

உள்­துறை, சட்ட அமைச்­சர் கா சண்­மு­கம் நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார். கொவிட்-19 தொற்று காலத்­தின்­போது அட­குக்­க­டைக்­கா­ரர்­கள் சங்­கம் முக்­கி­ய­மான பணியை ஆற்றி இருக்­கிறது என்று அமைச்­சர் தனது உரை­யில் குறிப்­பிட்­டார்.

மின்­னி­லக்­க­ம­ய­மாக வேண்­டி­ய­தன் முக்­கி­யத்­து­வத்தை கொவிட்-19 தொற்றுக் காலம் எடுத்­துக்­காட்டி இருக்­கிறது என்று குறிப்­பிட்ட அமைச்­சர், இதன் தொடர்­பில் இந்தச் சங்­கத்­தோ­டும் அட­குக்­கடைக்­கா­ரர்­க­ளோ­டும் அர­சாங்­கம் அணுக்­க­மாக ஒத்­து­ழைத்து வரு­கிறது என்று கூறி­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!