முதியோர் பாதுகாப்பு: நேரடி தொண்டூழியர் சந்திப்பு நிறுத்தம்

1 mins read
45949436-bc4c-4446-a6de-4082019ef9f2
-

சிங்­கப்­பூ­ரில் அன்­றா­டம் புதி­தாக கொவிட்-19 கிரு­மித்­தொற்று அதி­க­ரித்து இருக்­கும் சூழ­லில் முதியோர்­ பாது­காப்­பாக வீட்டிலேயே இருக்க வேண்­டும் என்று அர­சாங்­கம் கேட்­டுக்­கொண்டு உள்­ளது.

இதைக் கருத்­தில்­கொண்டு முதி­யோ­ருக்­குச் சேவை­யாற்­றும் பல அமைப்­பு­கள் நேரடி சந்­திப்பு­களைத் தவிர்த்­துக்­கொண்டு எச்­சரிக்­கை­யான அணு­கு­மு­றையை கடைப்­பி­டிக்­கின்­றன.

'ஒருங்­கி­ணைந்த பரா­ம­ரிப்பு முகவை' என்ற அமைப்பு தன்­னு­டைய மூத்த தொண்­டூ­ழி­யர்­கள், முதி­யோ­ரு­டன் நேர­டி­யாக ஈடு­பாடு கொள்­வதை நிறுத்தி இருக்­கிறது.

அதற்குப் பதி­லாக தொலைவில் இருந்து அவர்­கள் முதி­யோரைத் தொடர்பு­கொண்டு அவர்கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள உத­வு­கிறார்­கள். ஏறத்­தாழ 7,600 முதி­ய­வர்­களுக்­குச் சேவை­யாற்­றும் 'லையன்ஸ் பிஃபிரண்­டர்ஸ்' என்ற அமைப்பு, தொலை­வில் இருந்து தோழ­மைச் சேவை­களை வழங்­கும்­படி தனது தொண்­டூ­ழி­யர்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

'கம்­போங் காக்கிஸ்' என்ற சுய­உ­த­விக் குழு, தனது 10 முதிய தொண்­டூ­ழி­யர்­களை வீட்­டி­லேயே இருக்­கும்­படி கேட்­டுக்­கொண்­டுள்­ளது. முதி­ய­வர்­க­ளைப் பாது­காப்­பாக வைத்­தி­ருக்­கும் நோக்­கத்­தில் மக்­கள் கழ­க­மும் தாதிமை விடுதி­களும் முதி­ய­வர்­கள் பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள உதவி வரு­கின்­றன.

ஐந்து தாதிமை விடு­தி­களை நிர்­வ­கித்து நடத்­தும் என்­டி­யுசி ஹெல்த் நிறு­வ­னம், தன் பரா­மரிப்­பில் உள்ள முதி­ய­வர்­க­ளுக்குப் புதன்­கி­ழமை முதல் பூஸ்­டர் தடுப்­பூசி போடத் தொடங்­கி­யது.

ரென் சி மருத்­து­வ­மனை தனது சமூக மருத்­து­வ­ம­னை­யில் உள்ள 25 முற்­றிய நோயா­ளி­க­ளுக்கு அடுத்த வாரம் முதல் பூஸ்­டர் தடுப்­பூசி போடத் தொடங்­கும். அங் மோ கியோ­வில் உள்ள தனது விடு­தி­யில் இருக்­கும் ஏறத்­தாழ 70 முதி­ய­வர்­க­ளுக்­கும் அந்த இயக்­கத்தை அது விரி­வு­ப­டுத்­தும்.