பல்வேறு சமூகத் திட்டங்கள் வழியாக மின்னிலக்கம் பற்றி போதித்தது, தேவைப்படும் மாணவர்களுக்கு உதவியது ஆகியவற்றுக்காக ஐந்து மாணவர்களுக்கு 'இளம் தேசிய தலைவர் விருது' வழங்கப்பட்டது.
விருதுகளை ஹேலோஜன் ஃபவுண்டேஷன் சிங்கப்பூர் என்ற அமைப்பு வழங்கியது.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சாதனைகள் புரிந்து விருதுகளைப் பெற முயன்ற வர்களை அவர் பாராட்டினார்.
விருது பெற்றவர்கள் தங்கள் திட்டங்களை மேம்படுத்த ஆறு மாத கால மதியுரை செயல் திட்டங்களில் பங்கேற்கலாம்.

