‘மாதர்க்கு சமவாய்ப்பு; முதலாளிகள் மனப்போக்கில் மாற்றம் வேண்டும்’

வேலை, குடும்­பக் கடப்­பா­டு­களில் மாதர்க்கு நியா­ய­மான தெரி­வு­களை மேற்­கொள்ள மாதர்க்கு வாய்ப்­ப­ளிக்­கப்­பட வேண்­டும் என்று

பெண்­கள் மேம்­பாடு தொடர்­பான கலந்­து­ரை­யா­டல்­களில் இறு­தி­யில் பேசிய பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார்.

"மாதர் தங்­கள் முழு ஆற்­றலை அடைய, அவர்­கள் தங்­களை நிரூ­பிக்க அவர்­க­ளுக்கு சம­வாய்ப்­பு­கள் வழங்­கப்­பட வேண்­டும். நமக்­குள்ளே இருக்­கும் பாகு­பா­டு­கள் அவர்­க­ளுக்கு தடைக்­கற்­க­ளாக விளங்­கக்­கூ­டாது. வேலை­யி­டத்­தில் அவர்­க­ளுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய பாகு­பாடு அல்­லது அநி­யா­ய­மான நடத்­தைக்கு எதி­ராக பெண்­க­ளைப் பாது­காப்­போம்," என்று அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் பெண்­களில் நிலைமை பெரு­ம­ள­வில் வளர்ந்­துள்ள போதி­லும் பெண்­க­ளுக்கு எதி­ரான மனப்­போக்­கில் சமு­தா­யம் நவீன நிலைக்கு வந்­து­வி­ட­வில்லை. அவர்­கள் தொடர்­பான எதிர்­பார்ப்­பு­களும் சம­நி­லையை அடை­ய­வில்லை என்­றார் அவர்.

கடந்த ஆண்டு அர­சாங்­கம் ஏற்­பாடு செய்த 160 கலந்­து­ரை­யா­டல்­களில் இருந்து கிடைத்த கருத்து சேக­ரிப்­பில் 37 விழுக்­காடு வேலை­யி­டத்­தில் பெண்­க­ளுக்கு சம­வாய்ப்­பு­கள் வழங்­கப்­ப­டு­வது தொடர்­பா­னது என்று நேற்று நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில் கல்வி துணை அைமச்­சர் சுன் ஸுலிங் தெரி­வித்­தார்.

கலந்­து­ரை­யா­ட­லில் வேலை­யி­டத்­தில் பணி­ய­மர்த்­தல், பதவி உயர்வு, ஊழி­ய­ர­ணி­யில் பங்­கு­கொள்ள பெண்­களை ஊக்­கு­விக்க அவர்­க­ளுக்கு நீக்­குப்­போக்­கான வேலை ஏற்ாப­டு­கள், தலை­மைத்­துப் பொறுப்­பு­களில் கூடு­தல் பெண் பிர­தி­நித்­து­வம் போன்­றவை எழுப்­பப்­பட்ட முக்­கிய பிரச்­சி­னை­கள் என்று திரு­வாட்டி சுன் தெரி­வித்­தார்.

இதில் பேசிய டாக்­டர் ஃபிர்சா அஸ்­லாம், பிள்­ளை­களை வளர்ப்பு, பரா­ம­ரிப்­பா­ள­ராக இருக்­கும்­போது பெண்­கள் அடிக்­கடி எடுக்க நேரி­டும் பணி­வி­டுப்பு போன்­றவை பணி­ய­மர்த்­தும்­போது அவர்­க­ளுக்கு எதி­ராக கருத்­தில் ெகாள்­ளப்­ப­டு­வ­தாக அச்­சம் தெரி­விக்­கின்­ற­னர் என்­றார்.

பெண்­கள் தொடர்­பாக நட்­பு­வட்ட, வேலைப் பணி ஆலோ­சனை நிறு­வ­னத்­தின் இணை நிறு­வ­ன­ரான இவர், பெரும்­பா­லான நேரங்­களில் பணி­ய­மர்த்­தும் மேலா­ளர்­கள் இவர்­கள் வேலை­யி­டச் சூழலை புரிந்து கொள்­வ­தில் பின்­தங்­கிய நிலை­யில் இருப்­ப­தா­கவோ, அண்­மைய வந்­துள்ள வேலை குறித்த தக­வல்­கள் பற்றி அறிந்­தி­ரா­மலோ இருப்­ப­தாக நிைனக்­கக்­கூ­டும் என்று கூறு­கிறார்.

"இது மனப்­போக்கு பற்­றி­யது, பணி­வி­டுப்பு காலத்தை பின்­தங்­கிய நிலைக்கு தள்­ளி­விட்­டுள்­ள­தாக நினைக்­கா­மல் இருத்­தல் வேண்­டும்," என்று விளக்­கி­னார்.

மாதர்க்கு ஆதரவு தெரிவிக்க இணையத் திட்டம்

இதன் தொடர்­பில் மக்­கள் செயல் கட்சி நேற்று 'ஏக்­‌ஷன் ஃபார் ஹர்' என்ற இணைய திட்­டம் ஒன்றை அறி­வித்­தது. இதில் பொது­மக்­கள் மாதர்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­விக்க அழைப்பு விடுத்­தது அந்­தக் கட்சி. 

நேற்று நடை­பெற்ற மக்­கள் செயல் கட்­சி­யின் மாதர் பிரிவு மாநாட்­டில் இந்­தத் திட்­டத்தை அக்­கட்சி அறி­வித்­தது.

இதில் பங்­கு­பெற எண்­ணு­வோர், #ActionForHerwebsite என்ற இணை­யத்­த­ளத்­திற்­குள் செல்­ல­லாம். அதில் அவர்­கள் வாழ்­வில் சந்திக்­கும் ஒரு பெண் குறித்து அவர்­க­ளி­டம், "இந்­தப் பெண்­ணுக்­காக நீங்­கள் நட­வ­டிக்கை எடுப்­பீர்­களா?" என்ற கேள்வி கேட்­கப்­படும்."உங்­க­ளது நட­வ­டிக்கை, அது பெரிதோ, சிறி­ய­தா­னதோ, அவ­ருக்கு அவ­ரின் எதிர்­கா­லத்­துக்கு ஒரு மாறு­தலை ஏற்­ப­டுத்­தும்" என்ற இயக்க வாச­கம் இருக்­கும்.

மக்­கள் செயல் கட்­சி­யின் மாதர் பிரி­வுத் தலைவி ஜோச­ஃபின் தியோ, #ActionForHerwebsite என்ற இணை­யத்­த­ளத்தை தொடங்கி மாதர்­க­ளுக்கு அனைத்து சிங்­கப்­பூ­ரர்­களும் ஆத­ரவு தர உறுதி ஏற்­கு­மாறு கோரிக்கை விடுத்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!