முகக்கவச விநியோகிப்பு விரைவில் முடிவு

முகக்கவச விநியோகிப்பு விரைவில் முடிவு

1 mins read
5e64e802-f889-4c37-bc37-6d7f923b24e2
-

இல­வச முகக்­க­வ­சங்­களை 'தெமா­செக்' அற­நி­று­வ­னம் விநி­யோ­கிக்­கத் தொடங்­கிய சில நாட்­க­ளுக்­குப் பிறகு, அவற்றை பெற்­றுக்­கொள்ள 56 வயது திரு­மதி சியோங் லீ லீ 'நார்த்பா­யிண்ட்'ல் அமைந்­துள்ள 'கோல்ட்ஸ்­டோ­ரெஜ்' பல­ச­ரக்­குக் கடைக்­குச் சென்­றார். ஆனால் இருப்­பு­கள் தீர்ந்து விட்­டன. வேறொரு நாள் வேலை முடிந்து அதே இடத்­துக்கு எட்டு மணிக்­குப் பிறகு அவர் சென்ற போது முகக்­க­வ­சத்தை விநி­யோ­கம் செய்­யும் இடம் மூடி­விட்­டது.

புதன்­கி­ழ­மை­யன்று 'நெக்ஸ்' கடைத்தொகுதிக்குச் சென்­ற­போது ஒரு வழி­யாக இல­வச முகக்­க­வ­சங்­களை அவர் பெற்­றுக்­கொண்­டார்.

அடுத்த ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யோடு 'தெமா­செக்' அற­நி­று­வனம் இல­வச முகக்­க­வ­சத்­தின் விநி­யோ­கிப்பு முடிவு பெறும். செப்­டம்­பர் 14ஆம் தேதி நில­வ­ரப்­படி 2.6 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட முகக்­க­வ­சப் பெட்­டி­களை மக்­கள் பெற்­றுக்­கொண்­டுள்­ள­னர்.

இந்த விநி­யோ­கம் தொடங்­கிய ஆகஸ்ட் 26ஆம் தேதி அன்றே 105,000 குடும்­பங்­கள் இல­வச முகக்­க­வ­சங்­க­ளைப் பெற்­றுக்­கொண்­ட­னர்.

அன்­றி­லி­ருந்து ஒரு மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட முகக்­க­வ­சங்­கள் தயாரிக்கப்­பட்­டன.

ஒவ்­வொரு குடும்­ப­மும் 50 மருத்­து­வத்­தர முகக்­க­வ­சங்­க­ளை­யும் 25 'என்95' முகக்­க­வ­சங்­களை­யும் பெற்­றுக்­கொள்­ள­லாம். இவற்றை மக்­கள் குறிப்­பிட்ட 'கேபிட்­டா­லேண்ட்' பேரங்­கா­டி­க­ளி­லி­ருந்­தும் பல­ச­ரக்­குக் கடை­க­ளி­லி­ருந்­தும் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

ஸ்‌ட்­ரெ­யிட்ஸ் டைம்ஸ் சென்ற மூன்று கிளை­க­ளி­லும் நீண்ட வரி­சை­கள் காணப்­ப­ட­வில்லை.

பொது மக்­கள் 'எஸ்பி' மின் கட்­டண சான்­றை­யும் பெற்­றுக்­கொள்­ளும் முகக்­க­வ­சங்­களை எடுத்­துச்செல்ல பையை­யும் எடுத்து வர­வேண்­டும்.