தங்குவிடுதிக்கு புதிய தரக்கட்டுப்பாடு; உயரும் செலவு குறித்து விடுதி நடத்துநர்கள் கவலை

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கா­கப் புதி­தா­கக் கட்­டப்­படும் தங்கு விடுதி­க­ளுக்கு மேம்­ப­டுத்­தப்­பட்ட தர­நி­லையை மனி­த­வள அமைச்சு செப்டம்­பர் 17ஆம் தேதி அறி­வித்­தது.

இதை­ய­டுத்து, சிங்­கப்­பூர் தங்கு விடுதி நடத்­து­நர்­களும் முத­லா­ளி­களும் உய­ர­வி­ருக்­கும் செல­வினம்­குறித்து கவலை தெரி­வித்­துள்­ள­னர்.

வெளி­நாட்டு ஊழி­யர் குழுக்­கள் சிறிய தங்கு விடு­தி­களில் இம்­மாற்றங்­களை செய்­வதை வர­வேற்­ற­போ­தும் அவற்­றால் எந்த குறிப்­பி­ட­தக்க மேம்­பா­டும் இருக்­காது என கூறி­யது.

'பிபிடி' எனப்­படும் குறிப்­பிட்­டக் கார­ணங்­களுக்­கா­கக் கட்­டப்­படும் விடு­தி­களில் முதல் இரண்டு விடு­தி­கள் அர­சாங்­கத்­தால் கட்­ட­டப்­பட்­ட­வி­ருந்­தா­லும் அவ்­வி­டு­தி­களை நடத்­த­வும் வாட­கைக்கு விட­வும் தேவைப்­படும் கூடு­தல் செல­வு­கள் நடத்­து­நர்­க­ளைச் சென்­ற­டை­யும்.

உய­ரும் செல­வினத்தை நடத்­து­நர்­கள், முத­லா­ளி­கள் அர­சாங்­கம், நுகர்­வா­ளர்­கள் போன்ற சம்­பந்­தப்­பட்ட அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்ள வேண்­டும் என, எட்­டுத் தங்கு விடு­தி­களை நடத்­தும் 'சென்­டோரி­யன் கார்­ப்ப­ரே­ஷன்' கூறி­யது.

ஆயி­னும், செல­வு­கள் உயர்ந்­தா­லும் தர­மான தங்குவிடு­தி­களுக்கு அதிக தேவை இருக்­கிறது என அதன் தலைமை நிர்­வாகி திரு கோங் சி மின் ஸ்ட்­ரெ­யிட்ஸ் டைம்­ஸி­டம் கூறி­னார்.

சிங்­கப்­பூர் தங்கு விடுதி சங்­கம் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் தேவை­களை அறிந்­து­கொண்டு தற்­போதுள்ள தங்கு விடு­தி­களில் மாற்றங்­கள் ஏற்­ப­டுத்த ஆய்­வு­கள் மேற்­கொள்­ளும். 'ஆர்டி குரூப்'பின் இயக்குநரான திரு யுஜீன் ஆவ், ஒவ்வொரு அறையிலும் கழிப்பறையைக் கட்டுவது சவாலாக அமையும் என்றார்.

மேலும் ஒரு கழிப்பறையைக் கட்ட சுமார் $30,000 செலவாகும் என்றும் கூறினார். இத்தொகையை 20லிருந்து 30 அறைகள் வரை ஒப்பிடும்போது சிறிய தங்கு விடுதி நடத்துநர்கள் சமாளிக்க சிரமம் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டார்.

நிதியுதவித் திட்டங்கள் குறித்து ஏதேனும் அறிவிப்பு வந்தால் உடனே பணிகளைத் தொடங்க தாம் திட்ட மிடுள்ளதாகவும் விளக்கினார்.

'கொரி ஹோட்டிங்ஸ்'உடைய தலைமை நிர்வாகி திரு ஹூய் யூ கோ தமது ஊழியர்களுக்காக கூடுதல் கட்டணம் செலுத்துவதில் தமக்கு எந்த சிரமம் இல்லை என்றார். ஆனால், கட்டண உயர்வு கட்டுப்படியாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். தற்போது அவர் தமது 170 ஊழியர்கள் ஒவ்வொரு வருக்கும் மாதம் $350 கட்டணம் செலுத்துகிறார். அது $400 ஆக உயர்ந்தால் எந்த சிரம்மும் இல்லை என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!