சிமெண்ட் வாகனத்தில் சிக்கி ஆடவர் மரணம்

சிமெண்ட் வாகனத்தில் சிக்கி ஆடவர் மரணம்

1 mins read
5f11dfd9-580a-42c5-af2d-bda5e72a0cfa
விபத்து நிகழ்ந்­த இடம். படம்: ஷின் மின் டெய்லி நியூஸ் -

கட்­டு­மானத் தளத்­தில் இருந்த சிமெண்ட் வாக­னத்­தின் அடி­யில் 37 வயது ஆட­வர் ஒரு­வர் சிக்­கிக்­கொண்­டார். அவர் சம்­பவ இடத்­தி­லேயே மாண்­டார்.

சம்­ப­வம், பிடோக் 'ஆக்­டி­ஃப்­எஸ்ஜி ஸ்டே­டி­யம்' இருக்­கும் 1 பிடோக் நார்த் ஸ்ட்­ரீட் 2ல் நிகழ்ந்­தது.

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­ன­ருக்கு செப்­டம்­பர் 17ஆம் தேதி மாலை 5.55 அள­வில் உத­விக்கு அழைப்பு வந்­தது.

மீட்பு சாத­னங்­க­ளைப் பயன்­படுத்தி ஆடவரை மீட்­ட­னர். விபத்து நடந்த இடத்தில் சுமார் எட்டு போலிஸ் வாக­னங்­கள் காணப்­பட்­டன.

மனி­த­வள அமைச்சு புல­னாய்­வா­ளர்­களும் சம்­பவ இடத்­தில் காணப்­பட்­ட­னர்.

கவ­னக்குறை­வி­னால் மர­ணம் விளைவித்தாக போலி­சார் 26 வயது ஆட­வர் ஆட­வ­ரைக் கைது செய்து விசா­ரணை நடத்தி வரு­கி­றார்­கள்.