செய்திப் பிரிவுகளில் மின்னிலக்க உருமாற்றத்தை விரைவுபடுத்த இலக்கு

எஸ்பிஎச் செய்நேதிப் பிரிவுகளின் மின்னிலக்க உருமாற்றத்தை விரைவுபடுத்துவதே எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் எனும் ஊடக நிறுவனத்தின் தலையாய இலக்கு. சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸின் (எஸ்பிஎச்) ஊடகப் பிரிவுகள் எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டின்கீழ் கொண்டுவரப்படுகிறது.

“வாசகர்களின் அனுபவத்தை மேம்படுத்த புத்தாக்கத் திறனுடன் செயல்படுவதிலும் வடிவமைக்கப்பதிலும் நாங்கள் எங்களுக்கே சவால் விடுத்து வருகிறோம். இதற்காக மின்னிலக்கத் தொழில்நுட்பத் திறன்களை முழுமையாகப் பயன்படுத்துகிறோம்,” என்று எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டின் தலைவரான திரு கோ பூன் வான் தெரிவித்தார்.

மின்னிலக்க உருமாற்றுத் திட்டத்தைச் செய்திப் பிரிவுகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக அவர் கூறினார்.
“நாங்கள் ஆரம்பகட்டத்திலிருந்து தொடங்கவில்லை. எஸ்பிஎச் மீடியா டிரெஸ்ட்டுக்கு தேஎரிவான வழிகாட்டுதல், நிதி ஆதரவு ஆகியவற்றுடன் தேவையான ஊக்குவிப்பைத் தருவதே என் வேலையாகும்,” என்று திரு கோ தெரிவித்தார்.

கூடுதல் திறனாளர்கள், வளங்களுடன் செய்திப் பிரிவுகள், குறிப்பாக, மின்னிலக்க ஊடகப் படைப்பு பலப்படுத்தப்படும் என்றார் அவர்.
“பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட செலவுக் குறைப்பு நடவடிக்கைகளால் செய்திப் பிரிவுகள் பலவீனம் அடைந்துள்ளன. அவற்றை நாங்கள் படிப்படியாக மறுசீரமைப்போம். மின்னிலக்க ஊடகத்துக்கு ஏதுவாக வளங்ளை நாங்கள் ஒருங்கிணைப்போம். உயர் இலக்குகளை வகுத்து மின்னிலக்கச் செய்தி சந்தாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் கவனம் செலுத்துமாறு செய்திப் பிரிவுகளை நான் கேட்டுக்கொண்டுள்ளேன்,” என்றார் திரு கோ.
எஸ்பிஎச்சின் ஊடகப் பிரிவு வரும் டிசம்பர் மாதத்திலிருந்து உத்தரவாதத்திற்குட்பட்ட பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுவனமான (சிஎல்ஜி) எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டின்கீழ் செயல்படத் தொடங்கும்.

உத்தரவாதத்திற்குட்பட்ட பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுவனம் என்பது லாபநோக்கமற்ற அமைப்பாகும். ஈட்டப்படும் லாபம் மீண்டும் நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!