தோ பாயோ வட்டாரத்தில் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கிளையில் பணிபுரியும் ஊழியருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது கடந்த வெள்ளிக்கிழமையன்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அக்கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
புளோக் 111 தோ பாயோ லோரோங் 1ல் உள்ள அந்தக் கிளை சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பந்தயப் பிடிப்பு நிறுவனமான சிங்கப்பூர் பூல்ஸின் செய்தித்
தொடர்பாளர் தெரிவித்தார். புளோக் 85, புளோக் 95 தோ பாயோ லோராங் 4ல் உள்ள கிளைகளுக்குச் செல்லுமாறு மூடப்பட்டுள்ள கிளைக்கு வெளியே அறிப்பு ஒட்டப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாத்தில் இரண்டு விளையாட்டுத்துறை பந்தயப்பிடிப்புக் கிளைகளுக்கு கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் சென்றதை அடுத்த அவை மூடப்பட்டன.

