ஷெல் ஆலையில் தீ: நால்வருக்கு லேசான காயம்

ஷெல் ஆலையில் தீ: நால்வருக்கு லேசான காயம்

1 mins read
a9652ed1-5be6-46a4-a4e7-ab12d65cbbf3
-

புக்கொம் தீவில் அமைந்துள்ள ஷெல் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் மூண்ட தீயால் நால்வருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமையன்று நிகழ்ந்தது. அன்று காலை சுமார் 5.50 மணிக்கு சம்பவம் குறித்து தகவல் வந்தததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

தீயை அணைக்க ஷெல் நிறுவனத்தின் அவசர நடவடிக்கை குழுவினருடன் குடிமைத் தற்காப்புப் படை இணைந்து செயல்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஷெல்லின் அவசர நடவடிக்கை குழுவினரில் நால்வரின் கைகளில் லேசான தீக் காயங்கள் ஏற்பட்டன. அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டது.