இரண்டாம் காலாண்டில் ஆட்குறைப்பு அதிகரிப்பு

1 mins read
5eff0afd-d00a-4a55-b3cb-0c7dffb31c28
-

இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதால் சிங்கப்பூரில் தொழிலாளர் சந்தை பாதிக்கப்பட்டது.

முதல் காலாண்டைக் காட்டிலும் இரண்டாம் காலாண்டில் ஆட்குறைப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்தது. மேலும் பல ஊழியர்களுக்கான குறைவான வேலை நாட்கள் வழங்கப்பட்டன. சிலர் தற்காலிமகமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.

இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் 2,340க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.

முதல் காலாண்டில் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்ட 2,270 பேரைவிட இது அதிகம் என்று மனிதவள அமைச்சு வெளியிட்டுள்ள தொழிலாளர் சந்தை அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆட்குறைப்பு விகிதம் அதிகரித்துள்ளபோதிலும் நெருக்கடிநிலைக்கு முந்திய விகிதத்துக்கு அது உட்பட்டு இருப்பதாக மனிதவள அமைச்சின் நிரந்தரச் செயலாளர் அவ்பெக் காம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.