கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட 2,322 பயணிகளுக்கு சிங்கப்பூருக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் ஜெர்மனி, புருணை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதைத் திட்டத்தின்கீழ் இப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய பயண ஏற்பாட்டின்கீழ் விண்ணப்பம் செய்யப்படும் முறை தொடங்கி 16 நாட்களில் சிங்கப்பூருக்கு வர இவர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இரவு 11.59 மணி நிலவரப்படி ஜெர்மனியைச் சேர்ந்த 2,241 பயணிகளுக்கும் புருணையைச் சேர்ந்த 81 பேருக்கும் இம்மாதம் 8ஆம் தேதிக்கும் அடுத்த மாதம் 22ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.

