ஆயர் ராஜா உணவங்காடி நிலையத்தில் பாதிப்பு

ஆயர் ராஜா உணவங்காடி நிலையத்தில் பாதிப்பு

1 mins read
16e523af-853c-4cac-8ded-67f1d35c54d6
-

வெஸ்ட் கோஸ்ட் வட்­டா­ரத்­தில் உள்ள ஆயர் ராஜா உணவங்காடி நிலை­யத்­தில் சில கடைக்­கா­ரர்

­க­ளுக்­கும் துப்­பு­ர­வுப் பணி­யா­ளர்­

க­ளுக்­கும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இத­னைத் தொடர்ந்து அந்த உணவங்காடி நிலை­யம் நாளை மறு­நாள் வரை மூடப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புளோக் 503 வெஸ்ட் கோஸ்ட் டிரைவில் உள்ள அந்த உணவங் காடி நிலை­யம் கிருமி நாசினி கொண்டு சுத்­தம் செய்­யப்­படும் என்று தொடர்பு, தக­வல் அமைச்­ச­ரும் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எஸ். ஈஸ்­வ­ரன் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று பதி­விட்­டார். "கடைக்­கா­ரர்­கள், வாடிக்­கை­யா­ளர்­கள் ஆகி­யோ­ரின் பாது­காப்பை உறுதி செய்ய, உணவங் காடி நிலை­யம் மீண்­டும் திறக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பு தேவை­யான அனைத்து முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­படும்," என்­றார் அமைச்­சர் ஈஸ்­வ­ரன்.

உணவங்காடி நிலை­யத்­தில் எத்­தனை பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது என்ற விவ­ரம் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.