தோ பாயோ லோரோங் 8 ஈரச்சந்தை மூடப்பட்டது

தோ பாயோ லோரோங் 8 ஈரச்சந்தை மூடப்பட்டது

1 mins read
92d27f23-d63a-47ac-8504-e15a63b6d709
-

புளோக் 210 தோ பாயோ லோரோங் 8ல் அமைந்­துள்ள ஈரச்­சந்தை, உண­வங்­காடி நிலை­யத்­தில் கடைக்­கா­ரர்­க­ளுக்­கும் துப்­பு­ர­வுப் பணி­யா­ளர்­க­ளுக்­கும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளதை அடுத்து, அவை மூடப்­பட்­டுள்­ளன. ஈரச்­சந்­தை­யும் உண­வங்­காடி நிலை­ய­மும் சுத்­தம் செய்­யப்­படும் என்று தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தது.

"பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வதை நாங்­கள் தொடர்ந்து உறுதி செய்­வோம். "அதி­க­மா­னோர் பயன்­டுத்­தும் மின்­தூக்கிப் பொத்­தான்­கள் மீது சுய­மாக சுத்­தம் செய்­து­ கொள்­ளும் கிருமி நாசி­னிப்

பூச்­சைக் கடந்த ஆண்­டி­லி­ருந்து பீஷான்-தோ பாயோ நகர மன்­றம் பூசி வரு­கிறது. பாதிப்­பட்­டோ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­தோரை அடை­யா­ளம் காண ஈரச்­சந்­தை­க­ளுக்­குள் செல்­லும் அனை­வ­ரும் டிரேஸ்­டு­கெ­தர் மூலம் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது," என்று அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சக்தியாண்டி சுபாட் தெரிவித்தார்.