சாங்கி பாலத்தைக் கட்டிமுடிப்பதில் தாமதம்

சாங்கி பாலத்தைக் கட்டிமுடிப்பதில் தாமதம்

2 mins read
653d35af-08e2-4b2d-bdd7-2e7d8d873202
இம்மாதம் 14ஆம் தேதி வரையிலான சாங்கி மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஏற்­கெ­னவே தாம­தடைந்­த சாங்கி 'வைய­டக்ட்' எனப்­படும் மேம்பாலத்­தின் கட்­டு­மா­னப் பணி­கள் நிறை­வ­டைய கூடு­தல் காலம் ஆகும். கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சூழ­லால் தாம­தடைந்­துள்ள பல கட்டு­மா­னத் திட்­டங்­களில் இது­வும் அடங்­கும்.

தெம்­ப­னிஸ் விரை­வுச்­சாலை, தீவு விரை­வுச்­சாலை ஆகி­ய­வற்­றில் அமையும் சாங்கி மேம்பாலக் கட்­டு­மானத் திட்­டம், கொவிட்-19 சூழ­லால் எழுந்­துள்ள மனி­த­வ­ளப் பற்­றாக்­குறை உள்­ளிட்ட பிரச்­சி­னை­களால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸி­டம் தெரி­வித்­தது. இனி அடுத்த ஆண்டு பிற்­பா­திக்­குள் பாலம் கட்­டி­மு­டிக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­னார்.

பாலத்­தின் கட்­டுமானப் பணி­களை முத­லில் 2015ஆம் ஆண்­டில் உள்­ளுர் கட்­டு­மான நிறு­வ­ன­மான 'ஓகேபி ஹோல்­டிங்ஸ்' ஏற்­றுக்­கொண்­டது. அப்போது திட்­டத்­தின் மதிப்பு 94.6 மில்­லி­யன் வெள்ளியாக இருந்தது. சென்ற ஆண்டு முதல் காலாண்­டிற்­குள் மேம்பாலத்­தைக் கட்டி­மு­டிக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. ஆனால் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் கட்­டப்­பட்­டுக்­கொண்­டி­ருந்த மேம்பாலத்­தின் ஒரு பகுதி இடிந்து விழுந்­தது. வடி­வ­மைப்­பில் இருந்த பிழை­கள், மறைக்­கப்­பட்ட தவ­று­கள் உள்­ளிட்ட கார­ணங்­களால் அந்த விபத்து நேர்ந்தது.

அதனால் கட்­டு­மா­னப் பணி­கள் தாமத­டைந்­தன. மேம்பாலத்­தின் பகுதி இடிந்து விழுந்­த­தில் ஊழி­யர் ஒருவர் உயி­ரி­ழந்­தார், 10 பேர் காய­ம­டைந்­த­னர். இதற்­குப் பின்­னர் 'ஹுவா செங் பில்­டர்' நிறு­வ­னம் கட்­டு­மா­னப் பணி­களை ஏற்று நடத்­தி­யது. அப்போது ­திட்­டத்­தின் மதிப்பு 95.6 மில்­லி­யன் வெள்ளி. கட்­டு­மானப் பணி­கள் 2019ஆம் ஆண்டில் மீண்­டும் தொடங்­கின.

அடுத்த ஆண்டு முற்­பா­தி­யில் மேம்­பா­லத்­தைத் திறக்­கத் திட்­ட­மிடப்­பட்­டி­ருந்­தது.ஆனால் கொவிட்-19 கொள்ளை நோய்ப் பர­வல் நிலைமை மேலும் சிக்­க­லாக்­கி­யது. எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டன, தனி­மைப்­ப­டுத்­தும் உத்­த­ரவு உள்­ளிட்ட கார­ணங்­க­ளால் கட்­டு­மா­னப் பணி­கள் மேலும் தாம­த­டைந்­தன.

கட்­டி­மு­டிக்­கப்­பட்­ட­வு­டன் இந்­த மேம்பாலம் நெரி­ச­லைக் குறைத்து போக்கு­வ­ரத்­தைச் சற்று சீர்­ப­டுத்­தும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சாங்கி பாலத் திட்­டத்­தைப் போல் தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் பெரு­வி­ரைவு ரயில் பாதை போன்ற இதர சில போக்­கு­வ­ரத்­துத் திட்­டங்­களும் தாம­த­டைந்­துள்­ளன. 2024ஆம் ஆண்­டில் திறக்­கப்­ப­ட­வி­ருந்த தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை இனி 2025ல் திறக்­கப்­படும்.