'கூடுதல் சாலைகளுக்குப் பெணகள் பெயர்களை வைக்கவும்'

'கூடுதல் சாலைகளுக்குப் பெணகள் பெயர்களை வைக்கவும்'

1 mins read
4715ce7c-d74b-4e57-854c-6c4339ab1e9f
-

கூடு­த­லான சாலை­க­ளுக்­குப் பெண்­க­ளின் பெயர்­களைச் சூட்டுமாறு சிங்­கப்­பூர் மக­ளிர் அமைப்­பு­கள் மன்­றம் கேட்­டுக்­கொண்­டுள்­ளது. தற்­போது சுமார் 40 சாலை­க­ளுக்கு மட்­டுமே பெண்­க­ளின் பெயர்­கள் சூட்­டப்­பட்­டி­ருப்­பதை மன்­றம் சுட்­டி­யது.

அதே வேளை­யில் கிட்­டத்­தட்ட 540 சாலை­க­ளுக்கு ஆண்­க­ளின் பெயர்­கள் சூட்­டப்­பட்­டி­ருப்­ப­தாக அது குறிப்­பிட்­டது.

பெண்களின் பெயர்களைக் கொண்ட சாலைகளில் பாதிக்கு பிரிட்டனின் அரச பரம்பரையைச் சேர்ந்த பெண்களின் பெயர்கள் உள்ளன. எலிசபெத் டிரைவ், மார்கரெட் சாலை ஆகியவை அவற்றில் அடங்கும்.

எஞ்சியவற்றுக்கு சிங்கப்பூரை ஆட்சி செய்த பிரிட்டிஷ்காரர்கள், ஆரம்ப கால சிங்கப்பூர் வர்த்தகர்கள் ஆகியோரின் பெண் உறவினர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

இதன் தொடர்­பில் பாலி­னப் பாகு­பாட்­டைக் குறைப்­ப­தற்­கான பரிந்­து­ரையை சிங்­கப்­பூர் மக­ளிர் அமைப்­பு­கள் மன்­றம் நேற்று முன்­தி­னம் வெளி­யிட்­டது.

கூடு­த­லான பொது இடங்­க­ளுக்­குப் பெண்­க­ளின் பெயர்­களை சூட்டு­மாறு அது வேண்­டு­கோள் விடுத்­துள்­ளது.

பெண்­கள் ஆற்­றிய பங்­கை­யும் அவர்­க­ளின் முற்­போக்­குச் சிந்­தனை­யை­யும் கௌர­விக்­கும் வகை­யில் டோபி காட் க்ரீன் பகு­தி­யில் தோட்டம் ஒன்றை உரு­வாக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தா­கப் பிர­த­மர் லீ சியன் லூங் அறி­வித்­தி­ருந்­தார். நேற்று முன்தினம் சிங்­கப்­பூ­ரின் பெண்­க­ளின் வளர்ச்சி மீதான கலந்­து­ரை­யா­ட­லின் கடைசி அமர்­வில் திரு லீ அதைக் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

தற்­போது மூன்று சாலை­க­ளுக்கு மட்­டுமே சிங்­கப்­பூர் சமூ­கத்­திற்­குப் பங்­காற்­றிய பெண்­க­ளைக் கௌரவிக்­கும் வகை­யில் பெயர்கள் சூட்­டப்­பட்­டி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. சிக்­லப்­பில் உள்ள ஜாலான் ஹஜிஜா, எலி­யட் சாலை மற்­றும் வாக், புக்­கிட் தீமா­வில் உள்ள பிளாக்­மோர் ட்ரைவ் ஆகியவை அவை.