வீட்டிலிருந்து படிப்பது குறித்து மாறுபட்ட கருத்துகள்

வீட்டிலிருந்து படிப்பது குறித்து மாறுபட்ட கருத்துகள்

1 mins read
0d1bdb85-5bdc-4e12-bf30-4126263ca894
-

அடுத்த வாரம் திங்­கட்­கி­ழமை முதல் வீட்­டி­லி­ருந்து படிக்­கும் முறை 10 நாட்­க­ளுக்­குக் கட்­டா­ய­மாக்­கப்­படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்­த­தைத் தொடர்ந்து அதை இன்று முதல் தொடங்­கு­மாறு தொடக்­கப் பள்ளி மாண­வர்­க­ளின் பெற்­றோர் சிலர் கேட்­டுக்­கொண்டுள்ளனர்.

பள்­ளி­களில் தங்­கள் பிள்­ளை­களுக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­படும் அபா­யம் இருப்­பதாக சிலர் அஞ்­சு­கின்­ற­னர். வேறு சிலர், வீட்­டி­லி­ருந்து படிக்­கும் முறை முன்­ன­தா­கவே நடை­மு­றைப்­ப­டுத்தப்­பட்­டால் அது தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அல்­லது கட்­டாய விடுப்­பில் உள்ள மாண­வர்­க­ளால் வகுப்பு­க­ளுக்­குச் செல்ல வகை­செய்­யும் எனக் கூறு­கின்­ற­னர்.

கல்­வி­ய­மைச்­சின் அறி­விப்­பின்­படி அடுத்த திங்­கட்­கி­ழ­மை­யன்று தொடங்­க­வி­ருக்­கும் வீட்­டி­லி­ருந்து படிக்­கும் முறை, தொடக்­கப் பள்ளி இறு­தி­யாண்­டுத் தேர்­வு­கள் நிறை­வடை­யும் நாளான அடுத்த மாதம் ஆறாம் தேதி வரை நடை­மு­றைப்­படுத்­தப்­படும்.

இது, தொடக்­கப் பள்ளி ஒன்று முதல் ஐந்­தாம் வகுப்பு வரையிலான மாண­வர்­களுக்­குப் பொருந்­தும்.

இந்த ஏற்­பாட்­டி­னால் தங்­கள் பிள்­ளை­க­ளின் படிப்பு பாதிக்­கப்­படும் என்று வேறு சில பெற்­றோர் ஸ்ட்­ரெய்­டஸ் டைம்­ஸி­டம் தெரிவித்­தனர்.

மெய்­நி­க­ராக நடத்­தப்­படும் வகுப்பு­களில் கவ­னம் செலுத்த பிள்­ளை­கள் சிர­மப்­ப­டு­வ­தாக அவர்­கள் கூறி­னர்.

வீட்­டில் படிக்­க­வி­ருக்­கும் பிள்ளை­க­ளைக் கவ­னித்­துக்­கொள்ள தங்­க­ளுக்­கும் வீட்­டி­லிருந்து வேலை பார்க்­கும் ஏற்­பாட்­டைச் செய்­து­த­ரு­மா­றும் மற்ற பெற்­றோர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸின் ஃபேஸ்புக் பக்­கத்­தில் வேண்­டு­கோள் விடுத்­த­னர்.