பாலியல் பலாத்காரம், வன்முறை: பாதிக்கப்பட்டோருக்கு உதவி

2 mins read
5a287396-2cc1-48dd-aab7-0c6f5fd98517
கடந்த மூவாண்டுகளில் பாலியல் பலாத்கார விவகாரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதுகோப்புப்படம்/ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஆண்­டு­தோ­றும் பாலி­யல் பலாத்­காரம் தொடர்­பி­லான நூற்­றுக்­கணக்­கான புகார்­கள் குற்­றப் புலனாய்­வுத் துறை­யின் 'எஸ்­எஸ்­சிபி' எனப்­படும் மோச­மான பாலி­யல் குற்­றங்­க­ளுக்­கான பிரி­வி­டம் கொடுக்­கப்­ப­டு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. எண்­ணிக்கை அதி­க­ரித்த வண்­ணம் இருக்­கிறது.

2018ஆம் ஆண்­டில் மோச­மான பாலி­யல் குற்­றங்­க­ளுக்­கான பிரிவு, 213 பாலி­யல் பலாத்­கார விவ­காரங்­களைக் கையா­ண்டது. 2019ல் இந்த எண்­ணிக்கை 281ஆக அதிகரித்­தது, சென்ற ஆண்டு 348ஆகப் பதி­வா­னது. பெரும்­பாலான பாலி­யல் பலாத்­கார விவ­கா­ரங்­களில், குற்­றம் சுமத்­தப்­பட்ட ஆண்­கள் பாதிக்­கப்­பட்டோருக்குத் தெரிந்­த­வர்கள்.

மாதர் செய­லாய்­வுச் சங்­கத்­தின் பாலி­யல் வன்­மு­றைக்கு ஆளா­னோருக்­கான ஆத­ரவு வழங்­கும் நிலை­ய­மும் கடந்த மூவாண்­டுகளில் குறைந்­தது 258 பாலி­யல் பலாத்­கார மற்­றும் வன்­முறை விவ­காரங்­களைக் கையாண்­ட­தா­கத் தெரிவித்­தது. பாதிக்­கப்­பட்­டோ­ரில் 10ல் ஏழு பேர் அதி­கா­ர­பூர்­வ­மா­கப் புகார் தர முன்­வ­ரு­வ­தில்லை என்று மாதர் செய­லாய்­வுச் சங்­கத்­தின் ஆய்வு, ஆத­ரவு;g பிரி­வின் தலை­வர் ஷெய்லி ஹிங்­கொ­ராணி கூறி­னார்.

பெண்­கள் சார்ந்த விவ­கா­ரங்­களைக் கையாள உத­வும் ஆக்­க­கரமான பரிந்­து­ரை­க­ளைக் கொண்ட வெள்ளை அறிக்கை நாடா­ளு­மன்றத்­தில் அடுத்த ஆண்டு தொடக்­கத்­தில் வெளி­யி­டப்­படும் எனப் பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­தி­ருந்­தார். பெண்­க­ளுக்கு எதிரான வன்­முறை தொடர்­பி­லும் பேசி­ய திரு லீ, கூடு­தல் மனக் கவ­லைக்கு ஆளா­காத வகை­யில் பாதிக்­கப்­பட்­டோர் உதவி நாடும் சூழல் இருக்­க­வேண்­டும் என்­றார். பிரச்­சி­னை­யால் தங்­கள் மீது பழி போடப்­ப­ட­லாம் அல்­லது தாங்­கள் அவ­மா­னப்­ப­ட­லாம் என்ற அச்­சம் பாதிக்­கப்­பட்­டோ­ரி­டையே உரு­வாகக்­கூ­டிய நிலைமை எழக்­கூ­டாது என்­றும் அவர்­கள் வேத­னையை வெளி­யில் சொல்­ல­மு­டி­யா­மல் ஆத­ர­வின்றி தவிக்­கக்­கூ­டாது என்­றும் அவர் சுட்­டி­னார்.

குற்­றப் புல­னாய்­வுத் துறை­யின் மோச­மான பாலி­யல் குற்­றங்­க­ளுக்­கான பிரி­வின் விசா­ரணை அதி­கா­ரி­கள் பாலி­யல் பலாத்­கார விவ­கா­ரங்­களை;f கையாள்­வர்.

பாதிக்­கப்­பட்­டோர் மன­த­ள­வில் அதிக வலியை எதிர்­நோக்கக்­கூடும். அவர்­க­ளைப் புண்­ப­டுத்­தாத வகை­யில் விவ­கா­ரத்­தின் தக­வல்­க­ளைச் சேக­ரிக்­கும் உத்­தி­கள் சிறப்­புப் பயிற்­சி­கள் வாயி­லாக விசா­ரணை அதி­கா­ரி­க­ளுக்­குக் கற்­றுத் தரப்­படு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. விசா­ரணை மேற்­கொள்­ளப்­படும்­போ­தும் சட்டரீதி­யான நட­வடிக்கை எடுக்­கப்­ப­டும்­போ­தும் பாதிக்­கப்பட்டவருக்கு ஆத­ரவு அளிக்க 'விசிஓ' எனப்­படும் பாதிக்­கப்­பட்­ட­வர் பராமரிப்பு அதி­காரி ஒரு­வர் நிய­மிக்­கப்­ப­டு­வார்.

இவர்­கள் சமூக சேவை, மன­நலம் போன்ற துறை­களில் அனு­பவம் வாயந்த தொண்­டூ­ழி­யர்­கள். தற்­போது இத்தகைய 113 அதி­காரி­கள் பணி­யில் உள்­ள­னர்.