யதார்த்த நகைச்சுவை மூலம்...

தமது நகைச்­சு­வைக் காணொ­ளி­க­ளின் வழி பல சிங்­கப்­பூர் தமி­ழர்­க­ளின் கவ­னத்தை ஈர்த்து வரு­கி­றார் உள்­ளூர் நகைச்­சு­வைக் கலை­ஞர் கெல்லி ராமு. இவ­ரது 'கெல்­லிஸ் காமெடி'யில் தாய், மகள் இடை­யி­லான நகைச்­சு­வை­யான உரை­யா­டல்­கள், யதார்த்­த­மாக அமைந்­துள்­ளன.

தமிழ் இளை­யர் விழாவை முன்­னிட்டு அவ­ரது காணொ­ளி­கள், அவ­ரின் வலை­யொ­லித் தளம் மற்­றும் ஃபேஸ்புக் பக்­கத்­தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

"இன்­றைய இளை­யர்­களை மையப்­ப­டுத்தி இரு காணொளி­களை உரு­வாக்க தமிழ்மொழி கற்றல் வளர்ச்­சிக் குழு என்னை அணு­கி­யது. சிங்­கப்­பூர் தமிழ் இளை­யர்­களை எனது காணொ­ளி­கள் சென்­ற­டை­யும் என்­பது மகிழ்ச்சி தரு­கிறது," என்­றார் கெல்லி.

2016ல் தொடங்­கப்­பட்ட 'கெல்­லிஸ் காமெடி' நகைச்­சு­வைக் காணொளித் தொகுப்பு, மன­அ­ழுத்­தத்­தால் அவ­திப்­பட்ட கெல்­லியை அதி­லி­ருந்து மீண்­டு­வர உத­வி­யது. தமி­ழில் நகைச்­சு­வைக் காட்­சி­களை விரும்பிப் பார்க்­கும் இவர், தனது எழுத்­துத் திற­னை­யும் நடிப்­புத் திற­னை­யும் கொண்டு 30 வினாடி நகைச்­சு­வைக் காணொ­ளி­களாக உரு­வாக்­கத் தொடங்­கி­னார்.

ஓர் ஆண்­டுக்­குப்­ பின், இதில் முழு­மை­யா­கக் கவ­னம் செலுத்த தனது முழு­நேர வேலையை விட்­டு­விட முடிவு செய்­தார். ஒவ்­வொரு வார­மும் தம் அம்­மா­வைக் கேலி செய்­யும் நகைச்­சு­வைச் காணொளி­களை வெளி­யிட்டு பார்­வை­யா­ளர்­க­ளைச் சிரிக்­க­வைக்­கி­றார் கெல்லி.

"நான் இப்­ப­ய­ணத்­தைத் தொடங்­கி­ய­போது தமி­ழில் பேச மிக­வும் சிர­மப்­பட்­டேன். ஆனால் மீண்­டும் மீண்­டும் முயன்று இப்­போது என்­னால் சர­ள­மா­கத் தமி­ழில் பேச­மு­டி­கிறது.

"நகைச்­சுவை வழி இளை­யர்­க­ளை தமிழ் மொழி சென்­றடை­வ­தில் எனக்­கும் ஒரு பங்­குண்டு என்­ப­தில் எனக்­குப் பெரு­மை­யாக இருக்­கிறது," என்­றார் கெல்லி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!