முன்னோடி நாடகக் கலைஞர்கள் மூலம்...

முன்னோடி நாடகக் கலைஞர்கள் மூலம்...

2 mins read
22ed9138-2aeb-4e42-9614-17c8a7bd9f0d
முன்னோடித் தமிழ் மேடை நாடகக் கலைஞர்களையும் இளையர்களையும் ஒருங்கிணைத்து அவர்களின் படைப்புத்திறனை வெளிக்காட்டியது 'அவாண்ட்'. -

இளை­யர்­க­ளை­யும் முன்­னோ­டித் தமிழ் மேடை நாட­கக் கலை­ஞர்­க­ளை­யும் ஒருங்­கி­ணைத்து சிங்­கப்­பூ­ரின் தமிழ் மேடை நாடக வர­லாற்­றைக் கொண்­டா­டி­யது 'அவாண்ட்' நாட­கக் குழு. அக்­கால மேடை நாடக முன்­னோ­டி­கள், நாட­கம் வழி நடிப்­புத் திற­னை­யும் தமிழ் மொழி­யை­யும் தமிழ் இலக்­கி­யத்­தை­யும் எவ்­வாறு நிலை­நாட்­டி­னர் என்­பதை இளை­யர்­கள் அறிந்­து­கொண்­ட­னர்.

இந்­நி­கழ்ச்­சி­யில் 10 இளை­யர்­கள், 27 நாட­கக் கலை முன்­னோ­டி­யி­ன­ரு­டன் உரை­யாடி அவர்­க­ளது நாட­கப் பய­ணத்­தைப் பற்றித் தெரிந்­து­கொண்டு, ஆராய்ந்து, சேக­ரித்த தக­வல்­க­ளை­யும் அவர்­க­ளது கருத்­து­க­ளை­யும் ஸூம் வழி நடந்த சந்­திப்­பின்­போது படைத்­த­னர்.

இந்த நிகழ்­வில், இளை­யர்­க­ளின் படைப்­பு­க­ளோடு சிங்­கப்­பூர் தமிழ் மேடை நாட­கத் துறை­யின் வர­லாறு, வெற்றி- தோல்­வி­, நடிப்பு உத்­தி­கள் ஆகி­யவை பகிர்ந்­து­கொள்­ளப்­பட்­டன. சிங்­கப்­பூ­ரில் ஒரு சில தமிழ் நாட­கக் குழுக்­களே இருக்­கும் பட்­சத்­தில் இது­போன்ற முயற்சி ­க­ளின் வாயி­லாக இளைய தலை­மு­றை­யின் கவ­னத்­தை­ மேடை நாட­கம் பக்­கம் திருப்ப முடி­கிறது.

இந்த நிகழ்ச்­சி­யில் பங்­கு­பெற்ற இளை­யர்­களில் ஈஸ்ட் ஸ்பி­ரிங் உயர்­நி­லைப்­பள்­ளி­யின் உயர்­நிலை ஐந்து மாணவர் ரகு­நந்­த­னும் ஒரு­வர். இவர் சிங்­கப்­பூர் கவி­மாலை மாண­வ­ர­ணி­யின் துணைத் தலை­வர்.

"சிறந்த நடி­க­ரும் முன்­னோ­டிக் கலை­ஞ­ரு­மான திரு குண­சீ­லன் அவர்­களின் மேடைக்கலை அனு­ப­வத்­தைப் பற்றி நேரில் சந்­தித்து, உரை­யாடி, 43 ஆண்­டு­களில் அவர் செய்த சாத­னை­கள், மறக்கமுடி­யாத சம்­ப­வங்­கள் என அவ­ரது இத்­தனை ஆண்­டு­கால கலைச்­சே­வை­யைப் பற்றி நான் அறிந்­து­கொள்ள வாய்ப்பு கிடைத்­தது.

"பல ஆண்­டு­க­ளாக நம்மை மேடை, வானொலி, தொலைக்­காட்சி என அனைத்து பொழு­து­போக்குத் தளங்­களி­லும் மகிழ்­வித்து வரும் முன்­னோடி மேடை நாட­கக் கலை­ஞர்­களை நினைவு­கூர்ந்து, அவர்­க­ளின் கலைப்­ப­ணி­யைப் போற்­றும் இம்­மு­யற்­சி­யில் என்­னைப்­போன்ற இளை­யர்­கள் பங்­கேற்று அவர்­களுக்கு நன்­றி­யு­ரைத்­தது என் மன­தில் இடம்­பி­டித்தது," என்­றார் அவர்.

நாடக முன்­னோடியான திரு­மதி சித்­தி­ரா­வை பேட்டி கண்டு நிகழ்ச்சி படைத்த இளை­யர் கீர்த்­திகா ரத்னா, 23, தமிழ் மேடை நாட­கங்­க­ளைப் பார்த்­தி­ருந்­தா­லும் ஒரு மேடை நாட­கப் பின்­னணி­யில் நடப்­ப­வற்­றைப் பற்றி இந்த நிகழ்ச்சி மூலம் தெரிந்­து­கொண்­ட­தாகக் கூறி­னார். முன்­னோ­டி­க­ளின் கலைப் பற்­றும் மனஉறு­தி­யும் இளை­யர்­களை நெகிழ வைக்கும் விதத்தில் இந்நிகழ்ச்சி அமைந்­தது.