கருத்துப் பரிமாற்றம் மூலம்...

கருத்துப் பரிமாற்றம் மூலம்...

1 mins read
b49d6645-3997-4dc2-b7b9-9aa6ccea2a5f
புக்கிட் பாத்தோக் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் எவின் ராஜசேகரிடம் (வலது) ஆனந்த கண்ணன் பட்டிமன்றம் சவால் கேடயத்தை திரு மா கோவிந்தராஜூ வழங்கினார். படம்: மா கோவிந்தராஜூ -

மாண­வ­ரின் தமிழ்­மொ­ழிப் புழக்­கத்­தைச் செம்­மைப்­ப­டுத்­து­வது மட்­டு­மின்றி சிந்­த­னைத் திறன், குழு உணர்வு, இயல்­பாக உரை­யா­டும் திறன் ஆகி­ய­வற்றை ஊக்­கு­விப்­

ப­தற்­காக இளை­யர் பட்­டி­மன்­றம் நிகழ்­வுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்ததாக 'தமி­ழர் தக­வல் தொழில்­நுட்­ப சமு­தா­யம்' தெரி­வித்­தது.

13 வயது முதல் 35 வயது வரை­யி­லா­னோ­ருக்­கான இந்த நிகழ்வு, ஒரு வார­மாக நடை­பெற்­றது. 32 பேச்­சா­ளர்­கள், நான்கு பேர் கொண்ட எட்­டுக் குழுக்­க­ளா­கப் பங்­கேற்­ற­னர்.

விவா­தப் போட்­டி­யைப் போல் அல்­லா­மல், பட்­டி­மன்ற பாணி­யில் உள்ள தர்க்­கங்­க­ளுக்­குப் பதி­லாக கருத்­துப் பரி­மாற்­றத்­திற்கு முக்­கியத்­து­வம் கொடுக்­கப்படு­வ­தாக ஏற்­பாட்­டா­ளர் மா கோவிந்­த­ராஜூ தெரி ­வித்­தார்.

"இதில் பங்­கேற்ற பெரும்­பா­லான இளை­யர்­க­ள், பட்­டி­மன்­றத்­தில் கலந்து­கொண்­டது இதுவே முதல் முறை. அவர்­க­ளின் தன்­னம்­பிக்­கையை வளர்க்­கும் ஒரு வாய்ப்­பாக இது அமைந்­தது," என்று அவர் கூறி­னார்.

குழுக்­க­ளி­டையே போட்­டித்­தன்மை இருந்­தா­லும் இத­னால் மொழி ஆர்­வ­மும் பேச்­சுத்­திறனும் வளர்­வ­தாக ராஃபிள்ஸ் கல்வி நிலை­யத்­தைச் சேர்ந்த பிர­சன்னா தெரி­வித்­தார்.