சுயபரிசோதனை கருவி சில கடைகளில் விற்றுத் தீர்ந்தது

சுயபரிசோதனை கருவி சில கடைகளில் விற்றுத் தீர்ந்தது

2 mins read
713f9fac-a12e-4daf-9075-6aec5f09ed37
விவோசிட்டியில் செயல்படும் யூனிட்டி என்ற மருந்துக் கடையில் கொவிட்-19 விரைவுப் பரிசோதனைக் கருவி இல்லை என்பதைத் தெரியப்படுத்தும் அறிவிப்பு இடம்பெற்று இருந்தது.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தொற்று கூடிவரும் நிலையில் விரைவுப் பரிசோதனை கருவிக்குத் தேவை அதிகரிப்பு

கொவிட்-19 சுய­ப­ரி­சோ­த­னைக் கருவி தேவை­யான அள­வுக்குப் பல கடை­க­ளி­லும் இருப்பு இல்லை என்று தெரி­கிறது.

சில மருந்­துக் கடை­க­ளி­லும் சில்­லறை வர்த்­த­கக் கடை­க­ளி­லும் அது விற்­றுத் தீர்ந்­து­விட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் அன்­றாட கொவிட்-19 தொற்று கூடி வரும் சூழ­லில் அத்­த­கைய விரை­வுப் பரி­சோ­த­னைக் கரு­விக்கு தேவை அதி­க­ரித்­துள்­ளது.

தோ பாயோ சென்ட்­ரல், விவோ­சிட்டி, புக்­கிட் பாஞ்­சாங் ஆகிய பகு­தி­களில் செயல்­படும் குறைந்­த­பட்­சம் ஆறு சில்­லறை வர்த்­த­கக் கடை­களில் அந்­தக் கரு­வி­கள் விற்றுத் தீர்ந்­து­விட்­ட­தைக் காண முடிந்­தது என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்றுக் குறிப்­பிட்­டது.

தனி­நபர்­களும் நிறு­வ­னங்­களும் அத்­த­கைய சாத­னங்­களை அண்மைய வாரங்­களில் அதி­கம் வாங்­கு­வ­தால் அவற்­றுக்­கான தேவை ஏறத்­தாழ ஐந்து மடங்கு கூடி­யி­ருப்­ப­தாக வாட்­சன்ஸ் சில்­லறை வர்த்­தக நிறு­வ­னத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர் குறிப்­பிட்­டார்.

"பொது­வாகப் பார்க்­கை­யில் சந்தை­யில் குறிப்­பிட்ட அள­வுக்­குத்­தான் அந்­தக் கருவி கிடைக்­கிறது.

"வர­வர அவை வேக­மாக விற்றுத் தீர்ந்­து­வி­டு­கின்­றன," என்று அந்­தப் பேச்­சா­ளர் கூறி­ய­தா­க­வும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

வேறு நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து விரை­வுப் பரி­சோ­தனைக் கரு­வியைப் பெறு­வ­தற்கு வாட்­சன்ஸ் முயன்று வரு­வ­தா­கவும் அந்­தப் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

கடந்த வாரத்­தில் அந்­தக் கரு­விக்­கான தேவை இரண்டு மடங்­கிற்­கும் மேலாக கூடி­விட்­டது என்று என்­டி­யுசி ஃபேர்பி­ரைஸ் நிறு­வ­னத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­னார்.

சமூ­கத்­தில் தொற்று அதி­க­ரித்து வரும் சூழ­லில் இத்­த­கைய சுய­பரி­சோ­த­னைக் கரு­வி­யைப் பற்­றிய புரிந்­து­ணர்வு மக்­க­ளி­டையே அதி­க­மாக இருக்­கிறது. இதுவே அதிக விற்­ப­னைக்கு கார­ணம் என்று அந்­தப் பேச்­சா­ளர் விளக்­கி­னார்.

ஃபேர்பி­ரைஸ் நிறு­வ­னம் சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்­து­டன் சேர்ந்து போதிய கரு­வி­க­ளைப் பெறு­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­வ­தா­க­வும் அந்­தப் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

இவ்­வே­ளை­யில், பயம் காரண மாக அந்­தக் கரு­வியை அவ­சர அவ­ச­ர­மாக வாங்க வேண்­டி­ய­தற்­கான கார­ணம் எது­வும் இல்லை என்­றும் உள்­ளூ­ரில் போதிய அளவுக்கு இருப்பு இருப்­ப­தா­க­வும் விநி­யோ­கிப்­பா­ளர்­கள் தெரி­வித்து உள்­ள­னர்.

சிங்­கப்­பூ­ரில் பல்­வேறு குடி­யிருப்புப் பேட்­டை­க­ளி­ல் 56 இடங்­களில் இத்­த­கைய கரு­வி­யைப் பெறு­வ­தற்­கான 100 இயந்­திரங் களைத் தான் அமைத்து இருப்­ப­தாக சுகாதார அமைச்சு சென்ற வாரம் தெரி­வித்­தது.

இந்­தக் கரு­வியைக் குடி­யி­ருப்­பா­ளர்­கள் அனை­வ­ருக்கும் ஆகஸ்ட் 28 முதல் செப்­டம்­பர் 27 வரை அர­சாங்­கம் பர­வ­லாகக் கொடுத்து வரு­கிறது.

பாலர்­பள்ளி, தொடக்­கப்­பள்ளி மாண­வர்­க­ளுக்­கும் இது விநி­யோ­கிக்­கப்­ப­டு­கிறது. கட்­டாய பரி­சோ­தனைக்கு உட்­ப­டாத துறை­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­க­ளுக்­கும் இவை கொடுக்­கப்­ப­டு­கின்­றன.