'தீவிர சிகிச்சை நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென உயரக்கூடும்; மெத்தனம் கூடாது'

'தீவிர சிகிச்சை நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென உயரக்கூடும்; மெத்தனம் கூடாது'

2 mins read
495783fb-6667-4fb6-99e6-2c43f2b1f109
-

தீவிர சிகிச்­சை தேவைப்­படும் கொவிட்-19 நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை மிக வேக­மா­கக் கூடும் சாத்­தி­யம் இருக்­கிறது என்று நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்து இருக்­கி­றார்.

ஆகை­யால் மக்­கள் இதைப் பொறுத்­த­வரை மெத்­த­ன­மாக இருக்­கக் கூடாது.

தீவிர சிகிச்­சை தேவைப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை குறை­வா­கவே இருக்­கும் என்றோ நாட்­டின் தீவிர கண்­கா­ணிப்பு ஆற்­றல் வளத்­திற்கு ஒரு­போ­தும் நெருக்­கடி ஏற்­ப­டாது என்றோ மக்­கள் கரு­தி­விடக் கூடாது என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூசி இயக்­கம் மிகவும் செம்­மை­யாக இடம்­பெற்று வரு­கிறது. இப்­போது தீவிர சிகிச்சை பெறு­வோ­ரின் எண்­ணிக்கை 14ஆக இருக்­கிறது.

ஆகை­யால் இதைப் பற்றி கவ­லை­யடைய வேண்­டாம் என்று சிலர் கூறி­யி­ருப்­ப­தா­கத் தெரி­வித்த அமைச்­சர், இதன் தொடர்­பில் சில­வற்றை விளக்க வேண்­டி­யது பொருத்­த­மா­ன­தாக இருக்­கும் என்­றார்.

தடுப்­பூசி கொவிட்-19 தொற்றுக்கு எதிராக வலுவான பாது­காப்பை வழங்கு­கிறது. இருந்­தா­லும்­கூட கடு­மை­யான பாதிப்­பு­களை அது அறவே தடுத்து­வி­டும் என்று கூறி­விட முடி­யாது என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொவிட்-19 தொற்­றி­ய­வர்­களில் ஏறத்­தாழ 0.2 விழுக்­காட்­டி­னர்- அதா­வது 500 பேரில் ஒரு­வ­ருக்குத் தீவிர கண்­கா­ணிப்பு தேவைப்­ப­டக்­கூ­டிய ஆபத்து இருக்­கிறது என்­பது சுகா­தார அமைச்­சின் புள்­ளி­விவரங்­கள் மூலம் தெரி­ய­வந்து உள்­ளது.

அப்­படி கடு­மை­யாக பாதிக்­கப்­ப­டு­வோரின் எண்­ணிக்கை மிகக் குறை­வுதான் என்­றா­லும்­கூட தீவிர சிகிச்­சை தேவைப்­படக்­கூ­டிய நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை திடீ­ரென அதி­க­ரித்­து­விட முடி­யும் என்­பதைத் திரு வோங் சுட்­டிக்­காட்­டி­னார்.

நோயுற்ற ஒரு­வர் இரண்டு வாரங்­களுக்­கும் அதிக காலம் தீவிர சிகிச்­சைப் பிரிவில் இருக்க வேண்­டும் என கணக்­கிட்­டுப் பார்த்­தால் அந்­தப் பிரி­வுக்­கான தேவை, பிரச்­சி­னை­யாக ஆகி­வி­டக்­கூ­டிய ஒரு நிலையை விரை­வில் எட்­டி­வி­டும் என்று கொவிட்-19 சிறப்­புப் பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வர்­களில் ஒரு­வ­ரான திரு வோங் எச்­ச­ரித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் இப்­போது கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­காக ஏறத்­தாழ 100 தீவிர சிகிச்­சைப் படுக்­கை­கள் இருக்­கின்­றன. உட­ன­டி­யாக இந்த எண்­ணிக்­கையை 300 வரை அதி­க­ரிக்­கும் ஆற்­ற­லும் இருக்­கிறது.

முதி­ய­வர்­களில் அல்­லது தடுப்­பூசி போட்டுக்­கொள்­ளாத மக்­களில் அதி­கம் பேருக்­குத் தொற்று ஏற்­பட்­டால் தீவிர சிகிச்­சை தேவைப்­ப­டு­வோ­ரின் எண்ணிக்கை அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்­பதை அமைச்­சர் சுட்­டிக்­காட்­டி­னார்.

ஆகை­யால் தீவிர சிகிச்­சைப் பிரி­வுக்­கான தேவை தொடர்ந்து குறை­வா­கவே இருந்து வரும் என்று நாம் ஒரு­போ­தும் கரு­தக்­கூ­டாது என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

அடுத்த இரு வாரங்­கள் மிக முக்­கி­ய­மான கட்­டம் என்று கூறிய அவர், பொது­மக்­கள் தேவை­யற்ற சமூக நட­வ­டிக்­கை­களைத் தவிர்த்­துக்­கொள்ள வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தி­னார்.