சிங்கப்பூரில் அமையவுள்ள மீன் உயிரணு உற்பத்தி வசதி

சிங்கப்பூரில் அமையவுள்ள மீன் உயிரணு உற்பத்தி வசதி

2 mins read
b59b3fd6-a409-4730-bddb-c46b6455ddd7
Credits: Singapore Economic Development Board -

கொல்­லப்­பட்ட மீன்­க­ளுக்­குப் பதிலாக வளர்க்­கப்­பட்ட மீன் உயிர­ணுக்­க­ளால் தயார்­செய்­யப்­பட்ட மீன் உணவு வகை­கள் விரை­வில் சிங்­கப்­பூ­ரில் விற்­கப்­படலாம். அதற்கு வகை­செய்­யக்­கூ­டிய மீன் உயி­ரணு உற்­பத்தி வச­தியை சீன நிறு­வ­ன­மான அவான்ட் அடுத்த ஆண்­டிற்­குள் சிங்­கப்­பூ­ரில் திறக்­கத் திட்­ட­மிட்டுள்­ளது.

இத்­த­கைய மீன் உயி­ரணு உற்­பத்தி வசதி சிங்­கப்­பூ­ரில் திறக்­கப்­ப­ட­வுள்­ளது இதுவே முதல் முறை. அவான்ட் நிறு­வ­னத்­தின் ஓர் ஆய்­வுக் கூடம், அறி­வி­யல், தொழில்­நுட்ப, ஆய்வு அமைப்­பின் ஒரு பயிற்­சிக் கழ­கம் ஆகி­ய­வற்­று­டன் இந்த வசதி இணைந்து திறக்­கப்­படும். மீன் உயி­ரணு உற்­பத்­திக்­கான இந்­தக் கூட்டு ஆய்வுக் கூடம் போனா விஸ்தாவில் உள்ள 'பயோ­பொ­லிஸ்' கட்டடத்தில் அமைந்­தி­ருக்­கும். அது, சிங்கப்பூரின் உயி­ரி­யல் துறை மையப் பகுதி. வளர்க்­கப்­பட்ட மீன் உயி­ர­ணுக்­க­ளைக் கூடு­த­லாக உற்­பத்தி செய்ய வழி­வகுக்­கும் தீர்­வு­க­ளைக் கூடத்­தில் நடத்­தப்­படும் ஆய்வுகள் ஆரா­யும் என்று அவான்ட், அறி­வி­யல், தொழில்­நுட்ப, ஆய்வு அமைப்பு இரண்டும் இணைந்து வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டது. ஏற்­கெ­னவே உற்­பத்தி செய்­யப்­பட்ட மீன் உயி­ர­ணுக்­க­ளால் 'ஃபிஷ் ஃபிலே' போன்ற உணவு வகை­களை அவான்ட் நிறு­வ­னம் தயா­ரித்­தி­ருக்­கிறது.

உயி­ர­ணுக்­க­ளால் கோழி இறைச்­சி­யைத் தயா­ரிக்­கும் உலகின் முதல் வர்த்­தக வசதி அண்­மை­யில் சிங்­கப்­பூ­ரில் திறக்­கப்­பட்­டது. அது, அயர் ராஜா கிர­செண்ட்­டில் அமைந்­துள்­ளது. அதனைத் தொடர்ந்து அவான்ட் நிறு­வ­னம், அறி­வி­யல், தொழில்­நுட்ப, ஆய்வு அமைப்பு ஆகி­ய­வற்­றின் இந்த அறி­விப்பு வந்­துள்­ளது. உயி­ர­ணுக்­க­ளால் இறைச்­சியை உரு­வாக்­கும் நிறு­வ­னங்­கள் அதற்­கென சிங்­கப்­பூர் உணவு அமைப்­பி­ட­மி­ருந்து தனிப்­பட்ட உரி­மம் பெற்­றி­ருக்­க­வேண்­டும். இந்­நி­று­வ­னங்­கள் தயா­ரிக்­கும் உண­வுப் பொருட்­களை அமைப்பு சோத­னை­யிட்ட பிறகே அவற்றை விற்க அனு­மதி வழங்கப்படும்.