தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகின் எட்டாவது ஆகச் சிறந்த புத்தாக்கம் வாய்ந்த பொருளியலாக சிங்கப்பூர் திகழ்கிறது.
வட்டார அளவில் இம்முறை முதலிடம் தென்கொரியாவுக்குப் போனது. சென்ற ஆண்டு தென்கொரியா இரண்டாம் இடத்தைப் பிடித்தது, சிங்கப்பூர் முதலிடத்தை வகித்தது. இப்போது சிங்கப்பூர் இரண்டாம் இடத்தில் உள்ளது.
130 பொருளியல்களைக் கொண்டு உலக அறிவுசார் சொத்து அமைப்பு வெளியிட்ட பட்டியலில் இவ்விவரங்கள் தெரியவந்தன.

