ஜெர்மனி செல்லும் முதல் உல்லாசப் பயணக் குழு

ஜெர்மனி செல்லும் முதல் உல்லாசப் பயணக் குழு

1 mins read
5b3c7882-a620-40fa-a69b-1c9bee6d9905
-

தடுப்­பூசி போட்­ட­வர்­க­ளுக்­கான பய­ணப் பாதை­யின்­கீழ் முதல்­முறை­யாக சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த உல்­லா­சப் பய­ணக் குழு ஜெர்­ம­னிக்­குச் செல்­ல­வி­ருக்­கிறது.

குழு, நாளை அதி­காலை 12.45 மணிக்கு ஜெர்­ம­னிக்­குக் கிளம்­பும். 'இயு ஹோலி­டேஸ்' நிறு­வ­னம் இந்த 12 நாள் பய­ணத்­திற்கு ஏற்­பாடு செய்­துள்­ளது.

குழு­வி­னர் மியூ­னிக்­கில் தொடங்கி ஸ்டுட்­கார்ட், ஃபிராங்­ஃபர்ட் உள்­ளிட்ட நக­ரங்­க­ளுக்­குச் செல்­வர்.

குழு­வில் சுமார் 20லிருந்து 70 வய­துக்கு உட்­பட்­டோர் உள்­ள­னர். கொவிட்-19 'ஏஆர்டி' சோத­னைக் கரு­வி­க­ளைக் கைவ­சம் வைத்­திருப்­பது, பாது­காப்பு தூர இடை­வெ­ளி­யைப் பின்­பற்ற வகைசெய்ய 40 இருக்­கை­க­ளைக் கொண்ட பேருந்­தைப் பயன்­ப­டுத்­து­வது போன்ற பாது­காப்பு முன்­னெச்­சரிக்கை நட­வ­டிக்­கை­கள் பய­ணத்­தில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக 'இயு ஹோலி­டேஸ்' நிறு­வனத்­தின் இயக்­கு­நர் திரு வோங் இயூ ஹூங் தெரி­வித்­தார்.

குழு­வி­னர் எல்லா வேளை­களிலும் முகக் கவ­சம் அணிந்­திருக்­க­வேண்­டும், அனை­வ­ருக்­கும் உணவு தனித்­த­னி­யாக வழங்­கப்­படும்.

தடுப்­பூசி போட்­ட­வர்­க­ளுக்­கான பய­ணப் பாதை­யின்­கீழ் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டிய அவ­சி­ய­மின்றி ஜெர்­ம­னிக்­குச் சென்­று­வ­ர­லாம்.

அதற்­குப் பதி­லாக அவர்­கள் சுமார் நான்கு முறை கொவிட்-19 சோத­னை­களை மேற்­கொள்­ள­வேண்­டும்.

மற்ற சில சுற்­றுலா நிறு­வ­னங்­களும் இத்­த­கைய உல்­லா­சப் பய­ணத் திட்­டங்­களை உரு­வாக்கி வரு­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சிடம் தெரி­வித்­தன.