மின்னிலக்கமயமாகும் பிரபல 'தி நியூ பேப்பர்' நாளிதழ்

மின்னிலக்கமயமாகும் பிரபல 'தி நியூ பேப்பர்' நாளிதழ்

1 mins read
79a38e8c-d7fe-4e06-a5be-c78c03e48668
-

கடந்த 33 ஆண்­டு­க­ளாக நாளி­தழாக இருந்­து­வந்­துள்ள 'தி நியூ பேப்­பர்' வரும் டிசம்­பர் மாதம் 10ஆம் தேதி­யி­லி­ருந்து முழு­மை­யாக மின்­னி­லக்­க­ம­ய­மாக­வுள்­ளது.

இந்­தத் தேதிக்­குப் பின்­னர் 'தி நியூ பேப்­பர்' தாள் வடி­வில் நாளி­தழாக அச்­ச­டிக்­கப்­ப­டாது. செய்­தி­யறை­கள் மின்­னி­லக்­க­மயமா­வ­தைத் துரி­தப்­ப­டுத்­த­வும் வாச­கர்­க­ளின் விருப்­பங்­க­ளைப் பூர்த்­தி­செய்­ய­வும் 'எஸ்­பி­ஹெச் மீடியா டிரஸ்ட்' ஊடக நிறு­வ­னம் எடுக்­கும் முயற்­சி­களில் இந்த நட­வடிக்கை அடங்­கும்.

'தி நியூ பேப்­பர்' முழு­மை­யாக மின்­னி­லக்­க­ம­ய­மா­கும்­போது அதன் மூலம் வாச­கர்­களை மேலும் திருப்திப்படுத்தமுடியும் என்­றார் 'எஸ்­பி­ஹெச் மீடியா ட்ரஸ்ட்' நிறு­வனத்­தின் தலை­வர் திரு கோ பூன் வான். 'தி சண்டே டைம்ஸ்' நாளி­த­ழுக்கு நேற்று அளித்த பேட்­டி­யில் அவர் இவ்­வாறு சொன்­னார்.

வரும் டிசம்பர் மாதத்திற்குள் 'சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ்' நிறுவனத்தின் ஊடகப் பிரிவை 'எஸ்பிஹெச் மீடியா டிரஸ்ட்' ஏற்று நடத்தும்.

1988ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்ட 'தி நியூ பேப்­பர்', 2016ஆம் ஆண்­டில் இல­வச நாளி­த­ழாக மாற்­றப்­பட்­டது. அதற்­குப் பிறகு வாரந்­தோ­றும் திங்­கள் முதல் வெள்ளி வரை இந்த நாளி­தழ் 45 பெரு­விரைவு ரயில் நிலை­யங்­களில் மக்களுக்கு வழங்­கப்­பட்டு வந்­துள்­ளது. அடுத்த மாதம் 25ஆம் தேதி­யன்று மாற்­றி­ய­மைக்­கப்­பட்ட நியூ பேப்­ப­ரின் இணை­யத்­த­ளம் செயல்படத் தொடங்கும்.