இணையப் பாதுகாப்புச் சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் உரிமம் பெறுவது கட்டாயமாகவிருக்கிறது.
இது வாடிக்கையாளர்களுக்கு அதிக பாதுகாப்பை உறுதி செய்யும். மேலும் ஊடுருவலுக்கு இலக்காகக் கூடிய தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகளின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் இந்த நிறுவனங்
களின் தரத்தையும் இது உயர்த்தும் என்று சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவை நேற்று (சிஎஸ்ஏ) தெரிவித்து.
சேவை வழங்குவோர் நிறுவனங்கள் அல்லது தனிநபர்களாக இருக்கலாம். இவர்கள் புதிய கட்டமைப்பின்கீழ் உரிமம் பெறுவார்கள். புதிய உரிமம் அடுத்த ஆண்டு முற்பகுதியில் நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்மொழியப்பட்டுள்ள உரிமத்துக்கான நிபந்தனைகள், சட்ட விதிமுறைகள் குறித்த பொது
மக்களின் ஆலோசனையை சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவை தொடங்கியுள்ளது.
சேவை வழங்குவோர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க இது நடைமுறைக்கு வந்தது முதல் ஆறு மாத காலம் அவகாசம் வழங்கப்படும்.
உரிமம் பெற வேண்டிய சேவைகளில் ஒன்று 'ஊடுருவல் சோதனை' ஆகும். நிறுவனங்கள் பாவனை இணையத் தாக்குதல்களை அடையாளம் கண்டு பாதுகாத்துக்கொள்ள முடியுமா என்பதை இச்சேவை சரிபார்க்கும்.
உரிமம் பெற வேண்டிய பிற சேவைகள், கணினி கட்டமைப்புகளில் அச்சுறுத்தல்களை அடையாளம் காண கண்காணிப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கியது.
இத்தகைய சேவைகள் உரிமம் இல்லாமல் வழங்கப்பட்டால், $50,000 வரை அபராதம் விதிக்கப்படலாம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
மேலும், புதிய சட்டத்தின்கீழ், தவறிழைக்கும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யலாம் அல்லது நிறுத்தி வைக்கப்படலாம். தவறிழைக்கும் நிறுவனம் அல்லது தனிநபருக்கு உரிம நிபந்தனைக்கு இணங்க ஒவ்வொரு குற்றத்துக்கும் $10,000 வரை அபராதம் விதிக்கலாம். ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில் உரிம நிபந்தனைகள் பின்பற்றப்
படாதபட்சத்தில் பல்வேறு நிபந்தனைகளுக்கு மொத்த அபராதம் $50,000ஐ தாண்டக்கூடாது.
வாடிக்கையாளர்களின் தகவல்களை ரகசியமாக வைத்திருத்தல், நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளாக நியமிக்கப்படுபவர்கள் மோசடி, ஒழுக்கரீதியான பிரச்சினைகள் தொடர்பான குற்றப்பின்னணி
இல்லாதவராக, பொருத்தமானவர்களாக இருப்பது, அதிகாரிகள் கேட்கும் தகவல்களை அளித்தல், சேவைப் பதிவுகளைக் குறைந்தது மூவாண்டுகளுக்கு வைத்திருத்தல் முதலியவை முன்மொழியப்பட்ட உரிம நிபந்தனைகளில் அடங்கும். புதிய உரிமம் குறித்த கலந்தாலோசனை, அடுத்த மாதம் 18ஆம் தேதி வரை நீடிக்கும்.

